Skip to main content

தைரியம் இருந்தா என்னை கைது பண்ணி பாருங்க..! தங்கதமிழ்செல்வன் சவால்..!

Published on 04/03/2018 | Edited on 04/03/2018
thangatamil selvan


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் டிடிவி தினகரன் அணி சார்பில் நேற்று இரவு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்கதமிழ்செல்வன் பேசியதாவது,

அம்மா திட்டமான ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வந்தார். இவ்விழாவில் பிரதமர் மோடி பேசும் போது கூட தமிழில் பேசினார். ஆனால் இந்த ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆங்கிலத்தில் பேசினார்கள். அதுபோல் அம்மா என நான்கு முறை சொன்னார்களே தவிர மோடி என 32 தடவை சொன்னார்கள்.. இதுவா அம்மாவுக்கு காட்டுகிற விசுவாசம்? அம்மா மூலம் ஆட்சியில் உட்காந்து கொண்டு அம்மாவுக்கு விசுவாசமாக இல்லாமல் மோடிக்கு துதிபாடி வருகிறீர்களே வெட்கமாக இல்லை?. இந்த ஸ்கூட்டர் திட்டம் மூலம் 50ஆயிரம் பேர் தான் பயன் அடைவார்கள் ஆனால் அம்மா ஏற்கனவே அறிவித்து இருந்த செல்போன் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் 2கோடி மக்கள் பயனடைந்து இருப்பார்கள்.

இதை எல்லாம் சொல்ல போனால் நாம குற்றவாளி என்கிறார்கள். ஏழு தனிப்படை அமைத்து தேடுகிறோம் என்கிறார்கள். இதோ உங்க முன்னாடி தான் பேசி கொண்டு இருக்கிறேன் ’தைரியம் இருந்தா என்னை கைது பண்ணி பாருங்க என்ன விபரீதம் நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும்’ அதுனால தான் எங்களை கைது பண்ண வில்லை. ஓபிஎஸ் நூற்றாண்டு விழாவில் பேசும் போது எல்லாம் அதிமுக எஃகு கோட்டை அதையாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்கிறார்  ஆனால் ஏற்கனவே அந்த கோட்டையில் 32 செங்களை உருவி இருக்கிறோம் ஒரு செங்கள் எடுத்தாலே கட்டிடம் தாங்காது அப்படி இருக்கும் போது 32 செங்களை உருவி இருக்கிறோம் என்றால் எப்ப வேண்டுமானலும் கட்டிடம் விழுகும்.

18 எம்.எல்.ஏக்களின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கும் அதன் மூலம் நாங்க சட்டமன்றத்திற்குள் நுழைந்தால் உங்களுக்கு பதில் சொல்ல தெரியாது. அதுபோல் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இல்லை என்றால் தேர்தல் நடத்து.. அதில்  நாங்க 18 பேரும் அண்ணன் டிடிவி தினகரன் ஆசியோடு வெற்றி பெறுவோம். அப்படி நாங்க வெற்றி பெறவில்லை என்றால் அரசியலை விட்டே ஒதுங்கி கொள்கிறோம். மக்கள் எங்க பக்கம்தான் இருக்கிறார்கள் அதுனால எப்ப தேர்தல் வந்தாலும் அமோகமாக வெற்றி பெற்று அதன் மூலம் அண்ணன் டிடிவியை முதல்வராக கொண்டுவருவோம் என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தொடங்கிய இடத்திலேயே 'பிக்பாக்கெட்'; சசிகலா கூட்டத்தில் அதிர்ச்சி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Pickpocket right where the tour starts; shocked the Sasikala crowd

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா எனப் பல தரப்புகளும் பிரிந்து கிடக்கும் நிலையில் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும், அதேபோல் சசிகலா தரப்பும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

இந்நிலையில் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக இரண்டாவது முறையாக 'அம்மா வழியில் மக்கள் பயணம்' என்ற பெயரில் மீண்டும் சுற்றுப் பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார். தென்காசி அடுத்த காசிமேசபுரத்தில் இருந்து சசிகலா தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் சுற்றுப் பயணம் தொடங்கிய இடத்திலேயே பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்கள் 5 பேரிடம் மர்மநபர் ஒருவர் பிக்பாக்கெட் அடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் வந்த சசிகலாவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்கள் மத்தியில் சசிகலா உரையாற்றினார். இதனால் அங்கு பொதுமக்கள் கூடியதோடு செய்தி நிறுவனங்களின் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் செய்தியாளர்கள் மற்றும் மக்களிடமிருந்து மர்ம நபரால் பணம், நகை, பர்ஸ் ஆகியவை பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிக்பாக்கெட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

''நேரம் கனித்துள்ளது; என் அரசியல் பிரவேசம் தொடக்கம்'' - சசிகலா பேச்சு

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
 ''The time is ripe; My political entry begins'' - Sasikala speech

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 'அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்...' திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறைப்படி முழு சுதந்திரமாக நடக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி' எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா பேசுகையில், ''விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்திருப்பது சரியான முடிவு அல்ல. அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்கின்றனர். ஆனால் எனக்குக் குறிப்பிட்ட ஜாதியினர்தான் சொந்தம் என்றெல்லாம் கிடையாது. ஜெயலலிதாவும் ஜாதி பார்த்துப் பழகியவர் அல்ல. நான் ஜாதி பார்த்து இருந்தால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்கி இருக்க மாட்டேன். சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்துள்ளது. தற்போது அதிமுக மூன்றாவது இடத்திற்கும் நான்காவது இடத்துக்கும் சென்றுள்ளது. தானும் கெட்டு கட்சியையும் சிலர் கெடுத்து விட்டனர். அதிமுகவினர் ஒன்றிய வேண்டும் என நான் அடிக்கடி கூறி வந்ததற்கான நேரம் தற்பொழுது கனிந்துள்ளது. அதிமுகவில் தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடங்கியுள்ளதால் கட்சி அழிந்துவிடும் என்று கூற முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்'' என்றார்.