Skip to main content

“என்னை இந்து என்றுதான் அழைக்க வேண்டும்” - ஆளுநர் ஆரிப் முகமது கான் கோரிக்கை

Published on 29/01/2023 | Edited on 29/01/2023

 

"I should be called a Hindu" Governor Arif Mohammad Khan's speech

 

“என்னை இந்து என்றே அழைக்க வேண்டும்” என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார். 

 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், வட அமெரிக்காவில் வசிக்கும் கேரள மாநிலத்தினைச் சேர்ந்த இந்துக்கள் அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கலந்துகொண்டார்.

 

நிகழ்வினைத் தொடங்கி வைத்து பேசிய அவர், “இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் தான். இந்தியாவில் விளையும் உணவை நம்பி வாழ்பவர்கள், இந்திய நதிகளிலிருந்து நீரை குடிப்பவர்கள் எவரும் தன்னைத்தானே இந்து என அழைத்துக் கொள்ள வேண்டும். நான் இந்து என்பதை ஒரு மதச் சொல்லாக கருதவில்லை. இந்து என்பது புவியியல் சொல் என பிரபல சீர்திருத்தவாதியும் கல்வியாளருமான சையது அகமது கான் கூறியுள்ளார். இந்து என்பது ஒரு பிரதேசத்தில் பிறந்தவர்களை குறிக்கும் ஒரு சொல்லாகும். என்னை நீங்கள் இந்து என்றே அழைக்க வேண்டும். ஆனால் நான் ஒரு இந்து என்று கூறுவது தவறு என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இங்கு சதி நடக்கிறது” என அவர் கூறினார்.

 

ஆளுநரின் இந்தக் கருத்துக்கு ஒருசேர ஆதரவும் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. மத்திய அமைச்சர் வி. முரளிதரன் ஆளுநரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதே வேளையில் கேரள சாகித்ய அகாடமி தலைவரும் கவிஞருமான சச்சிதானந்தன் “இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களையும் அவர்களது கருத்துகளையும் புறக்கணிக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.