Skip to main content

போதையில் வாக்குவாதம்... கணவன்-மனைவி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழப்பு... பரிதவிக்கும் மூன்று வயது குழந்தை!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

ddd

 

பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடி வலசு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. மலைவாழ் பகுதியைச் சேர்ந்த பிரபு குமார், நந்தினி தம்பதியர் கடந்த 5 ஆண்டுகளாக இத்தோட்டத்தில் தங்கி விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சிவகுமார் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

 

இந்தநிலையில் நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த பிரபு குமார் தகராறு செய்துள்ளார். இதன் காரணமாக கணவன் - மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது திடீரென குடியிருக்கும் வீட்டிற்கு சுமார் 25 அடி தூரத்தில் உள்ள கிணற்றில் நந்தினி குடிபோதையில் ஓடிபோய் விழுந்துள்ளார். அருகில் இருந்த கணவன் பிரபுகுமார் மனைவியை காப்பாற்ற அவரும் ஓடிப்போய் கிணற்றில் விழுந்தார். 

 

இதனைப் பார்த்த பிரபுகுமாரின் அத்தை மகன் மகேந்திரகுமார் சத்தம் போட, கிணற்றில் விழுந்த இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். தோட்டத்து உரிமையாளர் தகவல் கொடுத்ததின் பேரில் வடக்கிபாளையம் காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைகள்; புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த பரிதாபம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Husband lost their life over wife passed away

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆடுதுறை ரவி(58). இவர் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு பூவரசன்(25) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில், மூத்த மகன் பூவரசனும் கந்தநேரி அடுத்த கழனிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வயா(20) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று மாலை ஐஸ்வர்யா தோழியின் நிச்சயதார்த்த விழா பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அதற்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு தன் கணவரிடத்தில் ஐஸ்வர்யா வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

பூவரசனும் அவரின் தாயாரை பள்ளிகொண்டா பகுதியில் நடைபெறும் வாரச் சந்தைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியதாகவும் அதற்காக கணவன் மனைவி இடையே சிறிய அளவிலான வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பூவரசன் தன் தாயை அழைத்துக் கொண்டு பள்ளிகொண்டாவில் உள்ள வாரச்சந்தைக்கு சென்றுள்ளார். பெண் தோழியின் நிச்சயதார்த்த விழாவிற்கு அழைத்துச் செல்லாததால் மனமுடைந்த ஐஸ்வர்யா வீட்டினுள்ளே படுக்கையறையில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.

சந்தைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய பூவரசன், ஐஸ்வர்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து உடனடியாக ஐஸ்வர்யாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முன்பே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கணவர், இன்று அதிகாலை மருத்துவமனை வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவரிடம் காட்டிய போது அவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட சிறு தகராற்றால், கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கணவன் மனைவிக்கிடையே தகராறு; மன வேதனையில் மாமியார் எடுத்த விபரீத முடிவு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Woman lost their life in grief

ஈரோடு சி.என்.சி காலேஜ் அருகே கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மேகலா (49). கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் ஜனனி. மேகலாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஜனனிக்கு திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தாய் மேகலா வீட்டிற்கு வந்துவிட்டார் ஜனனி. தனது மகள் கணவருடன் கோபித்துக் கொண்டு வந்ததால் மேகலா கடந்த சில நாட்களாகவே மன வேதனையில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், கேரளாவிற்கு ஒரு விசேஷத்திற்காக ஜனனி சென்றுவிட்டார். வீட்டிலிருந்த மேகலா திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மேகலா தங்கி இருக்கும் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மேகலா கிடந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர், முன்பே மேகலா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.