Skip to main content

பொங்கல் பரிசு விளம்பர அரசியல்! - அதிமுக, திமுக போட்டா போட்டி!

Published on 05/01/2021 | Edited on 05/01/2021

 

 

மக்களின் வரிப்பணமே 'பொங்கல் பரிசு' என்ற பெயரில் மக்களிடம் போய்ச் சேர்கிறது. ஆனால், ஏதோ சொந்த நிதியிலிருந்து தாங்களே கொடுப்பது போல், விளம்பரம் தேட ஆளும்கட்சி முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறது எதிர்க்கட்சி. அதனால், திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, தமிழக அரசு உத்தரவாதம் அளித்த நிலையில், டோக்கன்களில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் புகைப்படங்கள் இடம்பெறக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

 

அடுத்து திமுக தரப்பில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மீறி, பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் ரேஷன் கடைகள் முன்பாக, ஆளும்கட்சியினர் பேனர்கள் வைத்து, இடையூறு எற்படுத்துவதாக இன்னொரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.  

 

இந்நிலையில், சிவகாசி – பள்ளபட்டி பஞ்சாயத்தில் உள்ள ரேஷன் கடையில், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளி, பொங்கல் பரிசுத் தொகுப்புகளை தன் கையால் வழங்குகிறார் என்றும், சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்குகளைச் சேகரிப்பதற்கு, இந்த விளம்பர உத்தி மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்றும், திமுக தரப்பில் குமுறலாகச் சொன்னார்கள்.

 

அதிமுக தரப்பிலோ, எங்களைக் குற்றம் சொல்வதற்கு திமுகவினருக்கு அருகதை கிடையாது. சிவகாசி பள்ளபட்டி ஊராட்சித் தலைவர் (திமுக) உசிலை செல்வமும், அவர் கையால்தானே பரிசுத் தொகுப்புகளை மக்களுக்கு வழங்குகிறார் என்று பதிலுக்குக் குற்றம் சாட்டினர்.  

 

சிவகாசியில் மட்டுமல்ல.. தமிழகம் முழுவதும் இதே நிலைதான்! அரசுப் பணம் என்பது ஆளும்கட்சியினரின் சொந்தப் பணம் அல்லவென்பதை அறியாதவர்களா மக்கள்? திமுக ஊராட்சி மன்றத் தலைவரிடம் பொங்கல் பரிசுபெறும் மக்கள் திமுகவுக்கே வாக்களிப்பார்களா? வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளுக்கும் தேவையா இந்தத் தேர்தல் பப்ளிசிட்டி? 
  
 
    
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

கீழக்கரை ஜல்லிக்கட்டு நிறைவு; முதலிடம் பிடித்த அபி சித்தர்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Completion of lower bank jallikattu; Abhi Siddhar topper

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டது. இந்த ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினை இன்று (24.01.2023) திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக மாடு பிடி வீரருடன் கூடிய ஜல்லிக்கட்டு காளை மாட்டு சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் ஐ. பெரியசாமி எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, பி. மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையையும் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கலைஞர் சிலையுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

vck ad

தொடர்ந்து அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் தற்பொழுது போட்டியானது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் 10 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார். தலா 6 காளைகளை அடக்கி சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன், பரத் ஆகிய இருவர் இரண்டாவது இடத்தில் உள்ளனர். முதல் பரிசாக மஹிந்திரா தார் கார் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் பரிசாக பைக் வழங்கப்பட உள்ளது. அண்மையில் அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அரசியல் செய்யப்பட்டதாகவும், இதற்கு முழுக்க முழுக்க அமைச்சர் தான் காரணம் எனவும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் அபி சித்தர்  குற்றச்சாட்டு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

இளவட்ட கல் தூக்கும் போட்டியில் நிகழ்ந்த சோகம்

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Tragedy occurred in the youth stone-lifting competition

பொங்கல் திருநாளை தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் நாடுகளிலும் கொண்டாடி வருகின்றனர். தை மாதம் முழுவதும் கோலாகலமாகவே இருக்கும். அதேபோல் பல ஊர்களில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி அருகே உள்ள சம்மட்டிவிடுதி கிராமத்தில் நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியில் மரம் சாயாமல் இருக்க பாதுகாப்பிற்காக இழுத்து கட்டப்பட்டிருந்த ஒரு கயிற்றில் ஏறிய விஜயகுமார் (38)  என்ற இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tragedy occurred in the youth stone-lifting competition

இந்நிலையில் இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (29). இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவருடைய கிராமத்தில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார். அப்போது இளவட்ட கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. அதில் பிரபு இளவட்ட கல்லை தூக்கி பின்புறமாக எறிய முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக கல் முகத்தில் விழுந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பிரபு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொங்கல் போட்டியில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.