Skip to main content

“விஜயகாந்த்தினை பார்த்து நீங்கள் அவ்வளவுதான் எனச் சொன்னவரைக் கடவுள் கொண்டு சென்றுவிட்டார்” - பிரேமலதா

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

"God has taken away the one who saw Vijayakanth and said 'That's it'" - Premalatha

 

கன்னியாகுமரியில் தேமுதிக சார்பில் கழக கூட்டம் நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “காசு கொடுக்காமல் சோறு, நூறு என எதுவும் கொடுக்காமல் கூடும் கூட்டம் தேமுதிக கூட்டம் மட்டும்தான். இங்கிருக்கும் ஒவ்வொரு கொடி, பேனர், அந்த டியூப் லைட்ஸ் இவை எல்லாம் சாதாரண விஷயம் அல்ல. நாம் என்ன ஆளுங்கட்சியா இல்லை எதிர்க்கட்சியா எதுவுமே இல்லையே. எதிர்க்கட்சியாக ஆனோம். ஆனா எல்லாரும் துரோகம் பண்ணி விஜயகாந்த் முதுகில் குத்திவிட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் எல்லோரும் விஜயகாந்த் உடன் இருந்திருந்தால் அவருக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டு இருக்காது. இந்தக் கட்சியை யாராலும் தொட்டுப் பார்க்கவும் முடிந்திருக்காது. விஜயகாந்த் மிக நல்லவர் ஆனால் எல்லோரையும் நம்பிவிட்டார். 

 

விஜயகாந்த் முதுகில் குத்திவிட்டுப் போனவர்கள், நாம் நன்றாக இருக்கிறோம் என்று இன்று நினைக்கலாம். ஒருவர் கூட நன்றாக இல்லை. ஜெயலலிதாவை விஜயகாந்த் அப்படி என்ன கேட்டுவிட்டார். ஏன் பால் விலை மற்றும் பஸ் கட்டணத்தை உயர்த்தினீர்கள் என்றுதான் கேட்டார். மக்கள் பிரச்சனைகளைத் தானே கேட்டார். இதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா, இனிமேல் உங்களுக்கு இறங்கு முகம்தான் என்று சொன்னார். 

 

விஜயகாந்த்திற்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அவர் இன்றும் நம்முடன் இருக்கிறார் அல்லவா. விஜயகாந்த்தினைப் பார்த்து நீங்கள் அவ்வளவுதான் எனச் சொன்னவரை நீங்கள் அவ்வளவுதான் எனக் கடவுள் கொண்டு சென்றுவிட்டார். 

 

விஜயகாந்த் எந்த லட்சியத்திற்காகக் கட்சியை ஆரம்பித்தாரோ அவர் கண் முன் அவை கண்டிப்பாக  நிறைவேறும்” எனக் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிமுக-தேமுதிக கூட்டணி முறிவா?;பாஜகவை நெருங்கும் பிரேமலதா

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Will the AIADMK-DMK alliance break up?-Premalata approaching the BJP

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கலில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. அதன் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.

அதேநேரம் திமுக தலைமையிலான தனது கூட்டணியை நாடாளுமன்றத் தேர்தலிலும் அப்படியே அரவணைத்துக் கொண்டு சென்றார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அவரின் சாதுர்யமான அரசியலால் திமுக கூட்டணியில் எந்த முரண்பாடும் வரவில்லை. முக்கியமான முடிவுகள் அனைத்தையும் கூட்டணியினரோடு கலந்தாலோசித்து எடுத்து வருகிறார் ஸ்டாலின். இதனால் திமுக கூட்டணி உறுதியாக இருந்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை அறிவித்து பரப்புரை பணிகளை தொடங்கியுள்ளது.

அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலில் உருவான பாஜக-பாமக கூட்டணி, இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. இதற்காக இரு கட்சிகளும் கலந்துபேசி பாமக போட்டியிடும் என்றும், பாமகவின் வெற்றிக்கு பாஜக உதவும் என்றும் அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் உருவான அதிமுக-தேமுதிக கூட்டணி,தேர்தலுக்குப் பிறகு முறிந்து விட்டது என்கிறார்கள்.

அதாவது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதில்லை என்றும், தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தனது கூட்டணிக் கட்சியான  தேமுதிகவுடன் கலந்தாலோசிக்காமலே அதிமுகவினரிடம் மட்டும் ஆலோசித்து தன்னிச்சையாக அறிவித்தார் எடப்பாடி. இந்த முடிவு, தேமுதிக பிரேமலதாவை அதிர்ச்சியடைய வைத்தது. அதே சமயம், தனது கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்து, 'இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது' என்று தன்னிச்சையாக அறவித்தார் பிரேமலதா.

ஆக, 'அதிமுக-தேமுதிக கூட்டணி உறவு, தேனிலவு முடிந்ததும் முறிந்து விட்டது. மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் மலர்ந்திருப்பதால் பிரேமலதாவின் பார்வை பாஜக பக்கம் திரும்பியுள்ளது. பாஜகவின் மேலிடத் தலைவர்களை சந்திக்க முயற்சித்து வருகிறார் பிரேமலதா' என்கிறார்கள் தேமுதிக மாநில நிர்வாகிகள்.

Next Story

‘இடைத்தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு என்ன?’ - பிரேமலதா அறிவிப்பு!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
Premalatha announcement about the What is the position of the DMdk by elections

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. '

Premalatha announcement about the What is the position of the DMdk by elections

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது. இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்ரவாண்டி தேர்தலைப் புறக்கணிக்கிறது. காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள். இன்றைய கால கட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடதப்படுகிறது.

இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இன்றய ஆட்சியர்களின் கரங்களில் தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிக பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லி கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றைக்கு கேள்விக் குறியக்கப்பட்டுள்ளது என்பதை ஒட்டு மொத்த மக்களும், தேமுதிகவினரும் அறிவர். எனவே இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.