Skip to main content

ஜி.கே.வாசன் செய்த செயலால் நெகிழும் நிர்வாகிகள்!

Published on 30/08/2019 | Edited on 30/08/2019

மூத்த அரசியல்வாதியும், தனது தந்தையுமான மூப்பனாரின் மரணத்திற்கு பின் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பணியாற்றி பின்னர் அதனை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும், இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற்று ஒருமுறை மத்திய புள்ளிவிவரத்துறை இணை அமைச்சராகவும், மத்திய கப்பல் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். அதன் பின்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். கடந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தார். 

g.k.vasan



இந்த நிலையில்  மதுரையில் சமீபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சார்ந்த தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனும் வந்திருந்தார். கூட்டம் முடிய சற்று தாமதம் ஆனதால் மதுரையில் தமாகா கட்சியின் மதுரை மாவட்ட நிர்வாகி சேதுராமன் நடத்தும் ஓட்டலுக்கு ஜி.கே. வாசன் போயிருக்கிறார். அவருடன் கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் சென்றனர். பின்பு அங்கு மதிய உணவை நிர்வாகிகளுடன், ஜி.கே.வாசனும் சாப்பிட்டார். அதன் பின்பு அவரை வழியனுப்ப கட்சி நிர்வாகிகள் ரெடியாக இருந்தனர். திடிரென்று ஜி.கே.வாசன் ஹோட்டல் கேஷியரை அழைத்து நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் சேர்த்து பணத்தை கொடுத்தார். மதுரை மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட தலைவர் அனைவரும் கொடுக்க வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்த நிலையிலும் அனைவருக்கும் சேர்த்து ஜி.கே.வாசனே பணத்தை கொடுத்து விட்டு சென்றார். இதை பார்த்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தனர். 
 

 

சார்ந்த செய்திகள்