உள்ளாட்சித் தேர்தல் முடிந்த சூடு ஆறுவதற்குள் 2020 மார்ச், ஏப்ரல் போல் நடக்கும் சட்டமன்றப் பொதுத் தேர்தலையும் நடத்திவிடலாமா என்ற ஆலோசனையில் எடப்பாடி இருப்பதாக சொல்லப்படுகிறது. காரணம், ஒரு வேளை ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்து, அவர் கட்சியை வலுவான நிலையில் கொண்டு வந்து, கமலுடன் சேர்ந்து தேர்தலுக்கு ரெடியாகும் வரை எதற்கு அவகாசம் கொடுக்கணும்? அதற்கு முன்பே தேர்தலை நடத்தினால் தி.மு.க. என்கிற ஒரு பொது எதிரியை மட்டுமே சந்தித்தால் போதும் என்று அதிமுக தலைமை நினைப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கேற்ப தயாராக இருக்கலாம் என்று எடப்பாடி கணக்கு போடுவதாக கூறுகின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதற்கு உள்ளாட்சித் தேர்தலில் சொந்தக் கட்சியினரையும் கவனிக்க வேண்டும் என்று திட்டம் போடுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டம் தோறும் உள்ள மந்திரிகள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என்று உள்ளாட்சி சீட்டுக்களை தற்போது பிரித்து கேட்பதாக சொல்லப்படுகிறது. கட்சியில் தொண்டர்களின் ஆதரவு அதிகமாக இருந்தபோதும் ஓ.பி.எஸ். தரப்புக்கு உரிய சீட்டு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது தொடர்பான ஆதங்கம் ஓ.பி.எஸ். தரப்புக்கும் இருப்பதாக கூறுகின்றனர். தனக்கு சாதகமாக இருக்கக்கூடிய மந்திரிகள், மா.செ.க்கள் உள்ளிட்டோரிடம் சீட் விஷயத்தில் எடப்பாடி தாராளமாவே நடந்துக்குவார் என்கின்றனர். இதற்கிடையில் கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்னும் பெரிய எதிர்பார்ப்புகளோட இருப்பதாக கூறுகின்றனர். அதை எப்படி சமாளிப்பது என்று எடப்பாடி தரப்பில் ஆலோசனை நடப்பதாகவும் கூறிவருகின்றனர்.