
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இன்னொரு மகன் ஜெயபிரதீப் தந்தையின் அரசியலுக்கு உதவி செய்து வருகிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், நேரடி அரசியலில் பங்கேற்காமல், அ.தி.மு.க வேட்பாளர் லிஸ்ட் தயாரிப்பு வரை மறைமுகமாக உதவி வருகிறார். அப்படிப்பட்டவரை, வரும் தேர்தலில் நிற்கவைத்து, சட்டமன்றத்துக்கு அனுப்பனும்னு, அவரது குடும்ப உறுப்பினர்கள் கொடி பிடிக்கிறாங்களாம். அதோடு ஓ.பி.எஸ். மகன்களுக்கு நம்ம மகன் எதுல குறைஞ்சிட்டார்ன்னும் கேட்கறாங்களாம். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, குடும்ப அரசியலுக்கு எதிரா பிரச்சாரம் செய்யும் நிலையில், மிதுனும் தன்னை மாதிரி அரசியலுக்கு வந்து எதற்கு வசவு வாங்கணும்னு நினைக்கிறாராம். ஆனாலும், அடுக்களையின் வலியுறுத்தல் தொடர்கிறதுஎன்கிறார்கள் கட்சியில் விவரம் அறிந்தவர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)