Skip to main content

“நாடகத்தின் முடிவு இப்போது எல்லோருக்கும் தெரியும்” - ஜெய்ராம் ரமேஷ் விளாசல்!

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
“Everyone knows the end of the play now” - Jairam Ramesh

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இன்று  பிரதமர் பதவியேற்பு மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை நரேந்திர மோடி இன்று பதவியேற்க இருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7:15 மணிக்குப் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் மோடி மற்றும் அமைச்சர்களுக்குத் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். 

“Everyone knows the end of the play now” - Jairam Ramesh

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், “மே 28, 2023 நினைவிருக்கிறதா?. செங்கோலுடன் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைந்த நாள். மோடி ஒரு பேரரசர் என்று நியாயப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், தமிழ் வாக்காளர்களை ஈர்க்கவும், 15 ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு வரலாறு திரிக்கப்பட்டது. அந்த நாடகத்தின் முடிவு இப்போது எல்லோருக்கும் தெரியும்.

செங்கோல் என்பது தமிழர் வரலாற்றின் மதிப்பிற்குரிய அடையாளமாக உள்ளது, ஆனால் தமிழ் வாக்காளர்களும் உண்மையில் இந்தியாவின் வாக்காளர்களும் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் அவர் அத்துமீறிய  அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிபணிய வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்