erode by election dmk alliance victory confident minister velu 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தனது கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

Advertisment

அமைச்சர் எ.வ.வேலு இன்றுஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டதோடு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,"ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். மதச்சார்பற்ற கூட்டணியில் இருக்கின்ற ஒட்டுமொத்தக் கட்சித்தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களிடத்தில் நேரடியாகச் சென்று பார்த்தபோது நல்ல வரவேற்பு உள்ளது. திமுகவுக்குவாக்களிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். பெண்கள் வாக்கு திமுகவுக்கு தான். முதலமைச்சர் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களைத்தீட்டியுள்ளார். புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இது எந்த மாநிலங்களிலும் நடக்காத ஒன்று.

Advertisment

இத்தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஒன்றரைஆண்டுக்காலத்தில் பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். ஈரோடு மாநகரப் பகுதியில் 400 கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தொடர்ந்து நடக்க வேண்டும். அதற்கு ஆளுங்கட்சிக்கு உறுதுணையாக இருப்பவர் எம்எல்ஏவாக இருந்தால் தான் அனைத்து பணிகளும் நடக்கும். எதிர்க்கட்சி சட்டமன்றத்தலைவரால் சட்டமன்றத்தில் கேள்வி மட்டும் தான் எழுப்ப முடியும். அது தவிர அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. தங்கள் தொகுதிக்கு தேவையான திட்டம் குறித்து அவரால் கேட்க முடியுமா. எனவே திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

ஆளுங்கட்சியோடு கூட்டணியில் இருக்கின்ற காங்கிரசுக்கு வாக்களிக்க மக்கள் தெளிவாக உள்ளனர். அதிமுக சார்பாக செங்கோட்டையன் எம்எல்ஏ சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்த ஆட்சி குறித்து நல்ல விதமாகத்தான் கூறியுள்ளார். அவர் அந்த கட்சியில் இருப்பதால் தேர்தல் பணியாற்றி வருகிறார். அவருக்கே நன்றாக தெரியும். திமுக கூட்டணியின்காங்கிரஸ் வெற்றிபெற்றால் தான் ஈரோடு மாநகராட்சி வளரும் என்று. நேற்று தோழமைக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து ஒருங்கிணைப்பது எப்படி எனப் பேசி இருந்தோம். அப்போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அமைச்சர் நேரு பேசிக்கொண்டிருந்தனர்.அமைச்சர் நேரு அவர்கள் நாளை மறுதினம் செயல்வீரர்கள் கூட்டம் வைத்திருக்கிறோமே. அதற்கு வரும் தலைவர்களுக்கு முறையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டுள்ளார். அதற்கு அமைச்சர் அளித்த பதிலைதவறாகப் புரிந்துகொண்டவிஷமிகள் சிலர் அமைச்சர் நேருவும்இளங்கோவனும் பணம் குறித்து பேசுவதாக சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். அதை நான் கூட கேட்டேன். இதை வேண்டுமென்றே திட்டமிட்டு மார்பிங் செய்து பரப்பி விட்டுள்ளனர். எது செய்தாலும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி" என்றார்.