eps-ops

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் நீண்ட பேச்சுவார்த்தை, விடிய விடிய பஞ்சாயத்து என நடந்து ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வமே வெளியிட்டார். அதன்பிறகு ஓ.பி.எஸ். வீட்டுக்கு இ.பி.எஸ். சென்றார். இதனால் பஞ்சாயத்து நடத்திய அமைச்சர்கள் நிம்மதி அடைந்தனர்.

Advertisment

இதனிடையே தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இந்த முறையும் தேர்தல் களத்தில் கதாநாயகனாக வேண்டும் என்கிற திட்டத் தோடு டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, அதைக் கவனமாகத் தயாரித்து வருகிறார்களாம்.வழக்கமாகத் தரப்படும் தேர்தல் வாக்குறுதி களுடன், சமூகம் சார்ந்தும், மாவட்ட பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தந்தும் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.

அதே நேரத்தில், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பது பற்றி எடப்பாடியிடம் பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ். அவர் அதில் அக்கறை காட்டாததால், கட்சியின் வழிகாட்டுக் குழுவினரிடம் இது பற்றி ஓ.பி.எஸ். தனி ஆவர்த்தனம் செய்து வருகிறாராம். இதனால் மறுபடியும் எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் இடையே உரசல் வெடிச்சிடுமோன்னு அமைச்சர்களே கவலைப்படுவதாக அதிமுக சீனியர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment