தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, முதல்முறையாக அதிமுக தலைமை அலுவலகத்தில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.9 மாவட்டச் செயலாளர்களுடன் தற்போது அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை நடைபெற்றுவருகிறது. ஜெயக்குமார், தி.நகர் சத்யா, விருகை ரவி, பெஞ்சமின் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் பங்கேற்கவில்லை.
கடந்த தேர்தலில் சென்னையில் பல தொகுதிகளில் அதிமுக தோல்வி கண்டிருந்த நிலையில், அது தொடர்பாக இந்தத் திடீர் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் அதிமுகவை மீட்டெடுப்பதாகவும், விரைவில் தான் அரசியலுக்கு வர இருப்பதாகவும் சசிகலா தொண்டர்களுடன் பேசியிருந்த ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/eps-meet-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/eps-meet-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/eps-meet-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/eps-meet-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/eps-meet-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/eps-meet-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-06/eps-meet-7.jpg)