/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/502_26.jpg)
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவுஅமைச்சர்கள் இப்பவும் சசிகலா டீமுடன் சகஜமா இருக்கிறார்கள். டெல்டா பகுதியில் இருக்கும் எடமேலையூர், கண்டியர் தெரு ஊராட்சி மன்றத்தின் தலைவராக சித்ரா ராமச்சந்திரன் என்பவரை, உள்ளாட்சி தேர்தலில் நிறுத்தி, அவரை வெற்றி பெறச்செய்தவர், திவாகரனின் மகனான ஜெய் ஆனந்த். இப்பவும் அவர் மேற்பார்வையில் இருக்கும் இந்த பகுதிக்கு அமைச்சர் காமராஜ் நிறைய உதவிகளைச் செய்வதன் மூலம், மன்னார்குடித் தரப்புக்கு தன் விசுவாசத்தைக் காட்டிக்கிட்டு இருக்கிறாராம். சமீபத்தில் அந்த சித்ரா ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டபடி, நடமாடும் நியாய விலைக் கடையையும் ஏற்பாடு செய்துகொடுத்து, மன்னார்குடித் தரப்பை மனம் குளிர வச்சிருக்கார் காமராஜ்.
ஆனால், சசிகலா ரிலீசாவதை எடப்பாடி மனப்பூர்வமா விரும்பவில்லையாம். தன் அதிகாரத்தை தக்க வைக்க வேண்டும் என்றால் சசிகலா உடனடியாக ரிலீஸ் ஆகிவிடக்கூடாது என்று எடப்பாடி நினைக்கிறாராம். தேர்தலுக்குள் சசி வெளியே வந்தால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்னு அவர் பயப்படறாராம். அதனால், சிறைத் தண்டனையோடு, சசிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை 10 கோடி ரூபாயை, அவர் கட்டிவிடக் கூடாது என்பதில் எடப்பாடி ரொம்பவே கவனமாக இருக்கிறாராம். சசியுடன் சிறையில் இருக்கும் இளவரசியும், சுதாகரனும் அபராதத் தொகையை ஒரு வழியா கட்டிட்டாங்க. எனினும் சசிகலாவோ, அபராதத்தை எந்த கணக்கைகாட்டி, கட்டுவதென்று தவித்து வருகிறாராம். அதனால் அவர் மேலும் ஒரு வருடம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறதுன்னு அ.தி.மு.க. சீனியர்கள் சொல்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)