eps

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆடம்பரத்தில் ஜெயலலிதாவையே தூக்கிச் சாப்பிடுகிறாரார் என்று ஆளும் கட்சியினரே கமெண்ட் அடிக்கிறார்கள்.

Advertisment

ஹைதராபாத் திராட்சைத் தோட்ட விவசாயி என்று சொல்லிக்கொண்டஜெயலலிதா, ரொம்பவும் ஆடம்பர வாழ்க்கையை நடத்தினார். அந்த அம்மாவின் ஆட்சியை நடத்துவதாகச் சொல்லும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தன்னை ஒரு விவசாயி என அடிக்கடி சொல்லிக்கொள்கிறார். ஆனால் குபேர சுகத்திலேயே இருக்க விரும்புகிறார் என்கின்றனர் அக்கட்சியினர்.

Advertisment

இதுகுறித்து அக்கட்சியினரிடம் மேலும் விசாரித்தபோது, அவருக்கு முதல் அமைச்சர் என்ற முறையில் அரசு சார்பில் இனோவா கார் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் வெளியூர் பயணங்களில் அதைவிட சொகுசான ஆடி, லாண்ட்ரோவர் உள்ளிட்ட வெகு காஸ்ட்லியான கார்களைத்தான் ஊர் எல்லைகள் தாண்டியதும் பயன்படுத்துகிறாராம். இதனால்தான் விவசாயி எடப்பாடி, விவசாயி ஜெயலலிதா பாணியிலேயே தன் எளிமையைக் காட்டுகிறார் என்று ஆளுந்தரப்பினரே கமெண்ட் அடிக்கிறார்கள்.