தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் இன்று வரை ஓபிஎஸ்ஸின் நடவடிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உற்று கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது.தேர்தல் அறிவித்த உடனே துணை முதல்வர் பன்னீர்செல்வம் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தனது மகனுக்கு சீட் கேட்டு வாங்கி கொடுத்தார்.அதன் பின்பு பாஜக தலைவர்களை வாரணாசியில் சென்று தனியாக சந்தித்து பேசினார்.பின்பு மகன் வெற்றிக்காக தேனி தொகுதியில் மட்டும் அதிக கவனம் செலுத்தி விட்டு மற்ற வேட்பாளர்களையும்,கூட்டணி வேட்பாளர்களையும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்.

Advertisment

eps

அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் தனது மகன் என்றதும்,மத்தியில் பாஜக தலைவர்களிடம் பேசி அமைச்சர் பதவி வாங்கிட வேண்டும் என்று பாஜக தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.கட்சியில் உள்ள சில சீனியர்கள் தங்களுக்கு அமைச்சர் மற்றும் ராஜ்யசபா சீட் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதை எதையுமே கண்டுகொள்ளாமல் தனது மகனுக்காக மட்டும் பாஜக தலைவர்களை அணுகி வருவதால் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.இதனால் கட்சிக்குள் பலரும் ஓபிஎஸ் நடவடிக்கையை முதல்வரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர் எடப்பாடி கட்சியின் சீனியரான வைத்தியலிங்கத்துக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்றும் என்று பாஜக தலைமைக்கு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த சம்பவத்தால் கட்சிக்குள் மீண்டும் உட்கட்சி பூசல் அதிகமாகியுள்ளது என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.மேலும் ஓபிஎஸ்ஸின் நடவடிக்கையை முதல்வர் எடப்பாடி கவனமாக பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது.இவரது செயலால் கட்சியில் மீண்டும் எந்த பிரச்னையும் மீண்டும் வரக் கூடாது என்று எடப்பாடி காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில் நேற்று மோடி அமைச்சரைவையில் அதிமுக இடம் பெறாதது அதிமுக கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.