மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள துரை வைகோ இன்று மாலை முறைப்படி கட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ, கட்சி அலுவலகமான தாயகத்திற்கு வந்து பெரியார் சிலைக்கும், அண்ணா சிலைக்கும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மதிமுகவைச் சேர்ந்த பல்வேறு முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
மதிமுக தலைமைக் கழக செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் துரை வைகோ!(படங்கள்)
Advertisment