Skip to main content

தாமரைக்கு பதில் இரட்டை இலை உளறிய  பிரேமலதா !

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

அதிமுக கூட்டணியில் பாஜக , பாமக ,தேமுதிக , புதிய தமிழகம் , தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சில கட்சிகள் , அமைப்புகள் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் அந்த கட்சி வேட்பாளர்களுக்கும் ,கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ள்ளனர். சமீப காலமாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா  விஜயகாந்த் அவர்கள் பிரச்சாரத்தில் ஒரு சில சலசலப்புகள் ஏற்படுகின்றன இதனால் அதிமுக தொண்டர்களும் , கூட்டணி கட்சி தொண்டர்களும் அதிர்ச்சியில் உள்ளனர் .பிரேமலதா நடவடிக்கையால் தேமுதிக தொண்டர்களும் கொஞ்சம் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வந்துள்ளது .

 

premalathaஇந்த நிலையில்  ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் . அப்போது ‘மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தலிலும் இக்கூட்டணி நீடிக்கும். ராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும். ராமேஸ்வரம் முதல் சாயல்குடி வழியாக தூத்துக்குடிக்கு ரயில் போக்குவரத்து துவங்கப்படும். அதனால, பாஜ வேட்பாளருக்கு இரட்டை இலையில் ஓட்டு போடுங்க” என்றார். இதனைக் கேட்ட தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர் .இதனை கவனித்த பிரேமலதா,  முன்பு அதிமுகவில் நயினார் நாகேந்திரன் இருந்தவர் அந்த நினைவில் கூறி விட்டேன்’’ என சொல்லிவிட்டு அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார் . இப்படி பிரசாரத்தின்போது தாமரை சின்னத்திற்கு பதிலாக, இரட்டை இலைக்கு  வாக்கு கேட்டது  அங்குள்ள கட்சி தொண்டர்களுக்கும் , பொது மக்களுக்கும் அதிருப்தியாக இருந்தது . 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'விக்கிரவாண்டி இடைத்தேர்தல்'-வீடியோவில் ஆதரவு கேட்ட மு.க.ஸ்டாலின்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
'Vikravandi by-election' - M.K.Stalin asked for support in the video

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவு கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வாயிலாக பிரச்சாரம் செய்துள்ளார். அந்த வீடியோவில் வரும்,  ''விக்கிரவாண்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். ஜூலை 10-ஆம் நாள் நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல் மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கின்ற சிவ சண்முகத்திற்கு உங்கள் உள்ளம் கவர்ந்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகின்ற அன்னியூர் சிவா என்கின்ற சிவசண்முகத்தை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மண்ணின் மைந்தர்.  மக்களோடு மக்களாக மக்கள் பணியாற்றும் மக்கள் தொண்டர் தான் அன்னியூர் சிவா. 1986 ஆம் ஆண்டு முதல் அன்னியூர் சிவாவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தடம் மாறாத, நிறம் மாறாத கலைஞரோட உடன்பிறப்புகளில் அவரும் ஒருத்தர். கலைஞருடைய பாணியில் சொல்ல வேண்டும் என்றால் தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கின்ற ரத்த நாளங்களில் ஒருத்தர்''  என தெரிவித்துள்ளார்.z

Next Story

'மக்களின் கவலைகளைத் தெரிவிக்கும் உரிமை எனக்கு உண்டு' - ராகுல் காந்தி கடிதம்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
'I have the right to express people's concerns' - Rahul Gandhi letter

நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, அக்னி வீரர் திட்டம், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல்காந்தி பாஜகவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல் பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பு, வன்மம் ஆகியவற்றை தூண்ட மாட்டார்கள். ஆனால் பாஜகவினர் வெறுப்பை விதைக்கிறார்கள். 24 மணி நேரமும் பாஜகவினர் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பாஜகவும், பிரதமர் மோடியும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல' என பல்வேறு குற்றச்சாட்டுகளை சாரம்சமாக வைத்து ராகுல் காந்தி உரையாற்றியிருந்தார். அதேநேரம் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திய பாஜக எம்பிக்கள், ராகுலின் கேள்விகளுக்கு பதிலளித்ததோடு கண்டங்களையும் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இப்படி காரசாரமான விவாதங்கள், பதில்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்ததால் என்றும் இல்லாத அளவுக்கு நள்ளிரவு வரை மக்களவையில் விவாதம் நடைபெற்றது.  இன்று நடைபெறும் நிகழ்வில் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று பிற்பகலுக்குப் பிறகு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்துக்கள் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் பேசிய சில பகுதிகள் அவைக்குறிப்பில் இடம் பெறவில்லை. அதேபோல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகியவை குறித்து ராகுல் முன்வைத்த விமர்சனங்களும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'எனது உரையிலிருந்து சில பகுதிகளில் நீக்கியது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. மக்கள் பிரச்சனைகளை அவையில் எழுப்ப வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களின் கடமை. எனவே மக்களுடைய கவலைகளை அவையில் தெரிவிக்கும் உரிமை எனக்கு உள்ளது. ஆகவே எனது உரையில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் அவைக்குறிப்பில் சேர்க்க வேண்டும்' என வலியுறுத்தி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.