DMK's one year achievements .... IT to take people. Section ready!

திமுக அரசின் ஓராண்டு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், தேர்தல் உறுதிமொழிகள் குறித்து மக்களிடம் பரப்புரை செய்ய தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisment

திமுக, தகவல் தொழில்நுட்ப அணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் திங்கள் கிழமை (மே 16) நடந்தது. தகவல் தொழில்நுட்ப அணி மேலாளர் கோவி.லெனின் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. மாநில இணைச் செயலாளர் மகேந்திரன் சிறப்புரை ஆற்றினார்.

Advertisment

மகேந்திரன் பேசுகையில், ''தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்க, தகவல் தொழில்நுட்ப அணி பல்வேறு வகைகளில் உதவி புரிந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவடைந்துள்ளது. இந்த ஓராண்டில் அரசின் சாதனைகள், நிறைவேற்றப்பட்ட உறுதிமொழிகள் குறித்து மக்களிடம் கொண்டு செல்ல, தற்போது நாம் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்,'' என்றார்.

கூட்டத்தில், சிறப்பாக செயல்பட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் மருத்துவர் தருண் வரவேற்றார். சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், திமுக மாணவர் அணி மாநில துணை செயலாளர் தமிழரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.