Skip to main content

''இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளப்போவது திமுக தான்''-திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

 

விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரில் திமுகவின் முப்பெரும் விழா இன்று தொடங்கியது. இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான மு.க,ஸ்டாலின் மேடையில் பேசுகையில், ''திராவிட மாடல் என்று சொன்ன பிறகு 'திராவிடம்' என்ற சொல் இந்தியா முழுமைக்கும் அரசியல் கவனத்தை ஈர்த்தது. திராவிடம் என்பது ஒரு காலத்தில் இடத்தின் பெயராக, இனத்தின் பெயராக, மொழியின் பெயராக இருந்தது. இன்று அது ஒரு அரசியல் கொள்கையின் பெயராக இருக்கிறது. திராவிடம் என்றால் எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் பொருள். இன்னாருக்கு கல்வியை கொடு, இன்னாருக்கு கொடுக்காதே. இன்னாரை கோயில்களில் விடு, இன்னாரை விடாதே என்பது ஆரியமாடல். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரிப்பதுதான் ஆரியமாடல். இதற்கு நேர் எதிரானது திராவிட மாடல். எல்லோருக்கும் கல்வியை கொடு, எல்லாருக்கும் வேலையை கொடு, எல்லாருக்கும் அதிகாரத்தை கொடு, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பது தான் திராவிட மாடல்.

 

சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், இன உரிமை, மொழிப்பற்று, மாநில சுயாட்சி ஆகிய கருத்துக்களின் சேர்க்கையாக திராவிட மாடல் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துத்துறை வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை இந்த ஆட்சியினுடைய விரிந்த எல்லையாக அறிவித்திருக்கிறேன். இதை மையப்படுத்தி பல கூட்டங்களில், விழாக்களில் ஆற்றிய உரையில் முக்கியமான முழக்கங்களை மட்டும் சிறு தொகுப்பாக தயாரித்தது நூலாக வெளியிட்டு இருக்கிறோம். நாம் ஒரு கட்சிக்காரர்கள் அல்ல கொள்கைக்காரர்கள் என்பதை நமக்கு நாமே உணர்த்திக் கொண்டிருக்க வேண்டும். அதனையே ஊருக்கும் நாட்டுக்கும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். என்னை நம்பி இந்த இயக்கத்தையும், தமிழ் சமுதாயத்தையும் ஒப்படைத்து சென்றிருக்கிறார் கலைஞர். அந்த நம்பிக்கையை காப்பது ஒன்றே எனது ஒரே பணி. அந்த பணியை உலகமே ஒப்புக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக நான் செய்து வருகிறேன்.

 

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒப்பிட்டால் பெரும்பாலான வளர்ச்சி குறியீடுகளில் முன்னணி மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தவரைக்கும் மகாராஷ்டிராவிற்கு அடுத்து தமிழகம் உள்ளது. உலக சுகாதார அமைப்பு ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இந்திய அளவில் தனிநபர் வருமானத்தை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் என்பது அதிகம். பட்டினி சாவுகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவில் உள்ள தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளது. இப்படி தமிழ்நாட்டினுடைய சாதனைகளை சொல்லிக்கொண்டே போக முடியும். இதுதான் திராவிட மாடல் வளர்ச்சி, திராவிட மாடல் ஆட்சி.

 

எனக்கு இருக்கும் ஆசையெல்லாம் தமிழன் அனைத்திலும் முன்னேற வேண்டும் என்பதுதான் என்றார் தந்தை பெரியார். அத்தகைய கனவை செயல்படுத்தக்கூடிய செயலை அண்ணாவும், கலைஞரும் ஆட்சியில் அமர்ந்து நிறைவேற்றி காட்டினார்கள். அந்த செயற்கரிய செயலை செய்யக்கூடிய கடமை என்னுடைய தோளிலே சுமத்தப்பட்டிருக்கிறது. திமுகவின் தொண்டர்களான உங்களின் ஒத்துழைப்போடு நான் செயல்பட்டு வருகிறேன். தொண்டர்களால் ஆனவன் நான். இன்று ஆட்சியில் அமர்ந்திருப்பது தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல. தொண்டர்களின் தலைமை தொண்டனாக நான் ஆட்சியில் அமர்ந்துள்ளேன். உடன்பிறப்புகளால் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறேன். கட்சி, ஆட்சி ஆகிய இரண்டையும் ஒரு சேர வழி நடத்தி வருகிறேன். கட்சியில்லாமல் நாம் ஆட்சிக்கு வந்துவிடவில்லை. இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளப்போவது திமுக தான் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன் என்று சொன்னால் சிலதை மனதில் வைத்து, அல்லது என்னை மட்டும் நம்பி நான் அதைச் சொல்லவில்லை. ஏதோ அகங்காரம் தொனிக்கும் வகையிலே அதை நான் சொல்லவில்லை. கலைஞரின் லட்சோப லட்ச உடன்பிறப்புகள் மீது நம்பிக்கை வைத்துத் தான் அதை நான் சொல்கிறேன்.

 

கோட்டையில் நம்மை அமர வைக்க தொண்டர்களால் முடியும். தொண்டர்களால் மட்டுமே முடியும். இதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் நான். ஆட்சியில் இருந்தால் தான் இந்த நாட்டை நாம் வாழ்விக்க முடியும். திமுக ஆட்சிக்கு வந்த பொழுது மகிழ்ச்சி அடைய வேண்டிய அண்ணா 1967 நாம் ஆட்சிக்கு வந்த பொழுது  வருத்தத்தை வெளிப்படுத்தியதாக கலைஞர் எங்களிடம் பல நேரம் சொன்னதுண்டு. ஆட்சிக்கு வந்துட்டோம் கட்சியை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்று அண்ணா சொல்லியிருக்கிறார் பல நேரங்களில். அப்படியில்லாமல் கட்சியையும், ஆட்சியையும் இரு கண்களாக காக்க வேண்டும் என்று தலைமை கழக நிர்வாகிகளையும், அமைச்சர்களையும், மாவட்டச் செயலாளர்களையும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அத்தனை பேரையும் கேட்டுக்கொள்கிறேன்.

 

மக்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும், கழகத் தொண்டர்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும் அத்தகைய சூழ்நிலையை நாம் எப்போதும் தக்கவைத்திருக்க வேண்டும். ஒரு ராணுவ வீரனுக்கு நாட்டையும் காக்க வேண்டும் வீட்டையும் காக்க வேண்டும் என்ற இரட்டை கடமையை இருப்பதை போல நமக்கும் இரட்டைக் கடமை இருக்கிறது என்பதை நிர்வாகிகள் யாரும் மறந்து விடக்கூடாது. நமக்கு இந்தியா முழுமைக்குமான சில கடமைகள் இருக்கிறது. கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சம தர்மத்தை, சமூக நீதியை இந்தியா முழுமைக்கும் நாம் நிலைநாட்ட வேண்டும். வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட்சிக்கு அடிப்படை.  நாம் வளமான, வலிமையான மாநிலமாக இருப்பதால்தான் நம்மால் இவ்வளவு நன்மைகளை செய்ய முடிகிறது. இந்த அதிகாரம் பறிக்கப்படுமானால், தடுக்கப்படுமானால் இந்த அளவிற்கு நன்மையை செய்ய முடியாது. ஒற்றைத் தன்மை கொண்டதாகவும், ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதையும் நாம் ஏற்க முடியாது. ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள் மக்கள் விரோத சட்டங்களாக இருக்கிறது. ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்த பார்க்கிறார்கள். இவற்றை தடுக்க நாடாளுமன்ற மக்களவையில் தமிழ்நாட்டில் இருந்தும், புதுவையில் இருந்தும் நமது கூட்டணியின் சார்பில் 40 உறுப்பினர்கள் இருந்தாக வேண்டும். இந்தியாவின் மூன்றாவது கட்சியாக நாடாளுமன்றத்தில் நமது கட்சி இருப்பது நமக்கு பெருமை. அது தொடர இப்பொழுதே நீங்கள் களப்பணியை தொடர வேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.