நீட் தேர்வு தொடர்பான மசோதாக்கள் நிராகரிப்பு பற்றி மத்திய அரசு பதில் அளிக்காததைக் கண்டித்து மக்களவையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக சட்டத்தை மத்திய அரசு நிராகரித்தது ஏன்? தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவை மத்திய அரசு எப்படி நிராகரிக்க முடியும்? தமிழக அரசின் மசோதாவை 27 மாதங்கள் கிடப்பில் போட்டுவிட்டு தற்போது நிராகரித்துள்ளதாகஎன்று மக்களவையில் திமுக எம்.பி.யான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.
மத்திய அமைச்சர் பதில் ஏதும் சொல்லாததைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
ஏற்கனவே மாநிலங்களையில் திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, சி.பி.எம். எம்.பி. டி.கே.ரங்கராஜன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.