dmk mk stalin speech at chennai

சென்னை மாதவரத்தில் நடைபெற்ற 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "சென்னையில் எப்போது மழை வெள்ளம் வந்தாலும் முதலில் வந்து பார்ப்பது நானாகத் தான் இருப்பேன். தி.மு.க. வெற்றிக்குப் பிறகு இந்தச் சென்னை மீண்டும் சிங்காரச் சென்னையாக மாற்றப்படும்; இது உறுதி. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சுத்தமான, சுகாதாரமான, அழகான சென்னையை உருவாக்குவதே என் கனவு. பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரகர்கள், போர்ச்சுக்கீசியர்கள் என்று உலகத்தின் பல்வேறு மக்கள் வாழ்ந்த பாரம்பரியமான ஊரான சென்னையை நவீனப்படுத்த நமக்குக் கடமை உள்ளது. இது ஒரு நகரம் மட்டுமல்ல. தமிழ்நாட்டின் தலைநகரம். இந்த தலைநகரத்தை நாம் தலைசிறந்த நகரமாக மாற்ற வேண்டும். சென்னையின் அனைத்து தொகுதிகளையும் நாம் கைப்பற்றியாக வேண்டும்; ஒன்றைக் கூட விடக்கூடாது" என்றார்.

Advertisment

இந்தப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment