Skip to main content

வேல்யாத்திரை: நாடகம் நடத்தும் அதிமுக – பாஜக... குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள்

Published on 17/11/2020 | Edited on 17/11/2020
DMK Complaint against BJP's Vel Yatra and ADMk

 

பா.ஜ.க. தமிழக தலைவர் முருகன், தமிழர் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளுக்கு தரிசனம் செல்லும் வகையில் வேல்யாத்திரை நடத்தவுள்ளதாக அறிவித்தார். நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி முடியும் வகையில் பயண திட்டம் அறிவிக்கப்பட்டது.

 

இது வேல்யாத்திரையல்ல, அரசியல் யாத்திரை. இந்த யாத்திரை மூலம் தமிழகத்தில் மத மோதல் ஏற்படுத்த துடிக்கிறார்கள் என பல தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது. இதனால் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, கரோனாவை காரணம் காட்டி அனுமதி தரவில்லை.

 

அனுமதி வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது பாஜக, அனுமதி தரக்கூடாது என சிலர் மனு தாக்கல் செய்தனர். இரண்டு மனுக்கள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறியது நீதிமன்றம். தமிழக காவல்துறை, அனுமதி வழங்க முடியாது எனச்சொல்லியது.

 

இந்நிலையில் திட்டமிட்டபடி காவல்துறை அனுமதியில்லாமல் கடந்த நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில், பாஜக தலைவர் முருகன் வேல்யாத்திரையை தொடங்க, கைது செய்யப்பட்டு, ஒரு மண்டபத்தில் அடைத்துவைத்து, பின்னர் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விடுவித்தனர். தினம் ஒரு முக்கிய நகரத்தில் வேல்யாத்திரை நடத்த முயல அங்கு கைது செய்யப்பட்டு ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுவது வழக்கமாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு வேல்யாத்திரைக்கு விடுமுறை அளித்திருந்தது பாஜக.

 

நீங்கள் வேல் யாத்திரை நடத்துங்கள், நாங்கள் கைது செய்வது போல் கைது செய்து விடுவிக்கிறோம், மீண்டும் மறுநாள் அதேபோல் யாத்தரை நடத்துங்கள், கைது செய்து பின் மாலை விடுவிக்கிறோம் என தமிழகத்தை ஆளும் அதிமுகவும் – பாஜகவும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ளார்கள் என எதிர்கட்சிகள் பலவும் குற்றம் சாட்டுகின்றன. அந்த குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போலவே தமிழக காவல்துறையும் – தமிழக பாஜகவும் நடந்துக்கொள்கின்றன.

 

நவம்பர் 17ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை நகரில் இருந்து பாஜக தலைவர் முருகன், வேல்யாத்திரை நடத்துவதாக கூறியுள்ளார். அதற்காக நகரம் முழுவதும் பாஜகவினர் போஸ்டர் ஒட்டி, கொடிகள் நட்டுள்ளனர்.

 

DMK Complaint against BJP's Vel Yatra and ADMk


இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று 17.11.2020 ம் தேதி திருவண்ணாமலையில் பாரதிய ஜனதா கட்சியினர் நடத்த  இருக்கும் வேல் யாத்திரையில், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் நாகராஜன் ஐ.பி.எஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் காமினி, ஐ.பி.எஸ் மேற்பார்வையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில், ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஒரு உதவி காவல் கண்காணிப்பாளர், 12 துணை காவல் கண்காணிப்பாளர்கள், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் உட்பட மொத்தம் 1,195 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என அறிவித்துள்ளனர்.

 

வேல் யாத்திரைக்கு அரசாங்கமோ, காவல்துறையோ அனுமதி தரவில்லை. மத்திய – மாநில அரசுகளின் கரோனா கால விதிமுறைகளின்படி, மத, அரசியல் கூட்டங்களில் 100 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை. அப்படியிருக்க திருவண்ணாமலையில் பாஜக வேல் யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், முன்கூட்டியே கைது செய்ய முகாந்திரம் இருந்தும் அதனை செய்யாமல் 1,000த்திற்கும் மேற்பட்ட போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வேல்யாத்திரை தொடங்கி சிறிது தூரம் சென்றபின் கைது செய்வோம் என்பதை பொதுமக்களும் நாடகமாகவே காண்கிறார்கள்” என்கிறார்கள் நம்மிடம் பேசிய எதிர்கட்சியினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.