dddd

திமுகவின் வேட்பாளர் பட்டியல் குறித்த விவாதங்கள் அரசியல் விமர்சகர்களால் அலசப்படுகின்றன. வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமுள்ள நபர்களைதேர்வு செய்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

Advertisment

இருப்பினும், வாரிசுகளுக்கு வாய்ப்புகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி, மறைந்த பேராசிரியர் அன்பழகனின் பேரன் வெற்றியழகன், டி.ஆர். பாலுவின் மகன் ராஜா, ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி. செந்தில்குமார், பி.டி.ஆரின் மகன் தியாகராஜன், அன்பில் பொய்யா மொழியின் மகன் அன்பில் மகேஷ், தங்கபாண்டியன் மகன் தங்கம் தென்னரசு, ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை, கலைஞரின் முரட்டு பக்தர் தூத்துக்குடி பெரியசாமி மகள் கீதாஜீவன், கலைஞரின் நடைப்பயிற்சி தோழர் பேராசிரியர் நாகநாதனின் மகன் டாக்டர் எழிலன், சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறன், தி.நகர் ஜெ.அன்பழகன் தம்பி ஜெ.கருணாநிதி,கே.பி.பி. சாமியின் சகோதரர் சங்கர், பெரியண்ணன் மகன் இன்பசேகரன், காஞ்சிபுரம் அண்ணாமலையின் பேரன் எழிலரசன்என வாரிசுகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.