DMK calls to MDMK for constituency alottment

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

இதனையடுத்து, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று (03.02.2024) பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4 விருப்பத் தொகுதியில் இருந்து 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடங்களையும் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

Advertisment

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு, மதிமுகவிற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், நாளை (04-02-24) காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.