Skip to main content

''என்ன சம்பந்தம் பேசவா வராங்க; ரெய்டுனா என்னன்னு காவல்துறைக்கு தெரியாதா?'' - பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

Published on 28/05/2023 | Edited on 29/05/2023

 

NN

 

தென்காசி ஆலங்குளம் பகுதியில் நடைபெறும் கனிம வளக் கொள்ளையை எதிர்த்து தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்திருந்தார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''தமிழகத்தில் நிச்சயமாக கனிமவள கொள்ளை தடுக்கப்பட வேண்டிய விஷயம். தினம்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்குக் கனிமவளம் கடத்தப்படுவதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. கேரளாவில் இருந்து ஒரு லாரியாவது கனிம வளத்தை ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் வருமா? கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகள், கோழி கழிவுகள், மருத்துவக் கழிவுகளையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து தமிழகத்தை குப்பைக்காடாக மாற்றக்கூடிய பொருட்கள் மட்டும் கேரளாவில் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்பொழுது தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பைக்கூலமா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது'' என்றார்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று சோதனை நடக்கிறது. காவல்துறையினர் கொஞ்சம் கூட வாய் கூசாமல் சொல்கிறார்கள்' எங்களுக்கு சொல்லவே இல்லை; தகவல் கொடுக்கவில்லை; தகவல் கொடுத்திருந்தால் நாங்கள் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுத்திருப்போம்' என்று சொல்கிறார்கள். ரெய்டு என்றால்  சாதாரண மனிதனுக்கு கூட தெரியும். யாருக்கும் சொல்லாமல் திடீரென வருவதற்கு பெயர்தான் ரெய்டு. இவர்கள் என்ன சம்பந்தம் பேச வருகிறார்களா அல்லது டின்னருக்கு வராங்களா தகவல் கொடுத்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு வருவதற்கு. அப்படி வந்தால் அதற்கு பெயர் ரெய்டா. இது கூட காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியாதா? அப்பொழுது எந்த அளவிற்கு தமிழக அரசிற்கு காவல்துறை கைப்பாவையாக இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'கேப்டன் நேரில் வருகை' - வெளியான வீடியோவால் தேமுதிக தொண்டர்கள் நெகிழ்ச்சி

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
nn

நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனமான விஜயகாந்த் மறைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியினர் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தினமும் அவருடைய  நினைவிடத்தில் மலர் தூவி பூஜை செய்து வருகின்றனர். அதேபோல் தினமும் அங்கு வரும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று (18/06/2024) செவ்வாய்க்கிழமை திடீரென தேமுதிக அலுவலகத்தில் நாகப் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை உடனடியாக கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்துக்கு கட்சியின் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் பாம்பு ரூபத்தில் வந்திருப்பதாகத் தெரிவித்ததோடு அதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர் தேமுதிக தொண்டர்கள்.

பின்னர் சிறிது நேரம் அலுவலக வளாகத்திலேயே ஊர்ந்து கொண்டிருந்த பாம்பு பின்னர் அங்கிருந்து வெளியே தப்பி சென்றது. இந்த வீடியோவை தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தொடங்கி வைத்த 'கேப்டன் நியூஸ்' இணையதளபக்கத்தில் வெளியிடப்படுள்ளது. அதில் 'இன்று தலைமை  கழகத்திற்கு கேப்டன் நேரில் வருகை' எனக் கேப்சன் கொடுக்கப்பட்டு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. மேலும் அதில், 'செவ்வாய்க்கிழமை தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கேப்டன் எந்த வழியாக அலுவலகத்திற்கு வருவாரோ அதே வழியில் நாகம் வந்து, அவர் அமர்ந்திருந்த அறைக்கு சென்று, அங்கிருந்து வெளியேறியது' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தேமுதிக தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

விவசாய பட்ஜெட்டுக்கு எதிர்பார்ப்பு; கலைஞர் விழாவில் 200 விவசாயிகளுக்குப் பண்ணைக்கருவிகள்!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Farm implements for farmers at kalaignar centenary function

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கலைஞரின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியிலுள்ள 200 விவசாயிகளுக்கு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரான தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தனது 84, 85-வது மாத ஊதியத்திலிருந்து 2,10,000 ரூபாய் மதிப்பீட்டில் பண்ணைக்கருவிகள், தார்பாய்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி திமுக எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமாரும் கலந்துகொண்டார். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தனது உரையில் “விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அமைத்து அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கலைஞர்  ஆட்சியில்தான் இந்தியாவில் முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. மேலும், நேரடி நெல் கொள்முதல் மையம் உருவாக்கி விவசாயிகளின் நலனைக் காத்தவர் கலைஞர். அதுபோல்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கி சாதனை செய்துள்ளார். தற்போது வரவிருக்கும் விவசாய பட்ஜெட்டை, விவசாய பெருமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.   

Farm implements for farmers at kalaignar centenary function

இந்நிகழ்ச்சியில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்.பி.  “வாடிய  பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அவர்களின் கூற்றுப்படி பயிர்களை வாடாமல் பார்த்துக்கொள்ளும் விவசாயப் பெருமக்களாகிய தங்கள்  அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன்”எனப் பேசினார்.