
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரங்கள் சூடுபிடித்து, மீண்டும் பொதுக்குழு கூடுவதற்கான வழக்கில் நாளை காலை 9 மணிக்கு நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. மறுபுறம் அதிமுக பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவை மீட்கப் போவதாக அரசியல் பயணத்தைத் தொடங்கி இருக்கும் சசிகலாவுடன் அவரது சகோதரர் திவாகரன் இணை இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை சசிகலாவின் சகோதரரான திவாகரன் நடத்தி வந்த நிலையில் தஞ்சையில் வரும் 12ஆம் தேதி நடைபெறும் இணைப்பு விழாவில் சசிகலா தலைமையில் தனது கட்சியை இணைக்க இருக்கிறார் திவாகரன். சசிகலாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திவாகரன் கடந்த 2018 ஆம் ஆண்டு 'அண்ணா திராவிடர் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)