Skip to main content

‘நாளுக்கு நாள் எல்லை மீறிக் கொண்டே போகிறது’ - திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம்

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

'Day by day the border is being crossed'-DMK alliance parties condemn the Governor

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். தொடர்ந்து அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட இலாகாக்கள் மற்ற இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம், வேலைக்கு பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'தற்போது அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளார். செந்தில் பாலாஜி இனியும் அமைச்சராக நீடித்தால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது உள்ள கிரிமினல் வழக்கு தொடர்பாக நீதிமன்ற காவலில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

'Day by day the border is being crossed'-DMK alliance parties condemn the Governor

 

இதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆளுநர் ஆர்.என்.ரவி செய்திருப்பது அரசியல் ரீதியான முடிவு. தொடர்ந்து ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். ஆர்.எஸ்.எஸ் தொண்டர் போல ஆளுநர் செயல்படுகிறார். ஒரு அமைச்சரை நீக்கவோ சேர்க்கவோ முதலமைச்சரால் மட்டும் தான் முடியும். தற்போது ஒரு அமைச்சரை நீக்கியுள்ள ஆளுநரால் ஒருவரை அமைச்சராக சேர்க்க முடியுமா? ஆளுநர் தனது செயலுக்காக நீதிமன்றத்தில் குட்டுப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. ஆளுநர் அறிவிப்பை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

nn

 

இந்நிலையில் இதற்கு திமுக கூட்டணிக் கட்சிகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. செந்தில் பாலாஜி நீக்கப்பட்டது சட்டவிரோதம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். “நீதிமன்ற காவலில் இருப்பதால் அமைச்சர் பதவியை பறிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கியது சட்டவிரோதம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார்” என வைகோ தெரிவித்துள்ளார். அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், “மாநில அரசுடன் மோதலை உருவாக்குகிறார் தமிழக ஆளுநர். சர்வாதிகாரி போல தமிழக ஆளுநர் செயல்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

 

விசிக தலைவர் திருமாவளவன், “அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய ஆளுநரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. சங்பரிவாரின் விருப்பங்களை நிறைவேற்றி வருகிறார் ஆளுநர். ஆளுநரின் இந்த தான்தோன்றித்தனத்தை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். “மோடி அரசாங்கமே ஆளுநரை ஏவி இது போன்ற செயல்களில் ஈடுபட வைக்கிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். “பாஜக அரசால் அனுப்பப்பட்டுள்ள முகவராக ஆளுநரின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் எல்லை மீறிக்கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கி உள்ளது சர்வாதிகாரத்தின் உச்சம்” என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் த.மு.மு.க.!  

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

Governor bungalow prisoners issue

 

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள கோப்பை கிடப்பில் போட்டிருப்பதைக் கண்டித்தும், விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும் ஆளுநர் மாளிகையை  முற்றுகையிடும் போராட்டத்தை இன்று 28ம் தேதி நடத்துகிறது தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம். 

 

இது குறித்து த.மு.மு.க.வின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.விடம் நாம் பேசியபோது, “முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய பரிந்துரைத்துக் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி  ஆளுநருக்குக் கோப்பு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு.  இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி,  அக்கோப்பிற்கு ஒப்புதல் அளிக்காமல்  கால தாமதம் செய்து வருகிறார்.  முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலைக்கான கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை  வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டத்தை நடத்துகிறோம். மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களையும் கோப்புகளையும் நிலுவையில் வைத்துக் கொண்டிருப்பது ஆளுநரின் ஜனநாயக விரோதத்தைக் காட்டுகிறது” என்கிறார் ஜவாஹிருல்லா. 

 

இவரது  தலைமையில் நடைபெறவுள்ள இந்த முற்றுகை போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்ற உள்ளனர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொள்ளவிருப்பதால் பாதுகாப்பைப்  பலப்படுத்த காவல்துறை தயாராகி வருகிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“இதயமும், இரக்கமும் இல்லாதவராக ஆளுநர் அமைந்திருப்பது வரலாற்று அவலம்” - முத்தரசன்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Mutharasan strongly condemned Governor RN Ravi

 

மக்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்ற துயரத்தை கண்டு கொள்ளாத ‘இதயமும் இரக்கமும்’ இல்லாதவராக ஆளுநர் அமைந்திருப்பது வரலாற்று அவலமாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி சட்டத்தின் ஆட்சி முறைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவர் ஆளுநர் பொறுப்பேற்ற நாளில் இருந்து மக்களாட்சியின் மாண்பையும், மரபையும் அலட்சியப்படுத்தி வருகிறார். சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் மறுத்து வருகிறார். வழிவழியாகப் பின்பற்றி வரும் மரபுக்கு மாறாக விளக்கம் பெறுதல் என்ற பெயரில் மசோதாக்களை திருப்பி அனுப்புகிறார். அரசு தரப்பில்  போதுமான விளக்கம்  அளித்த பிறகும் எல்லையற்ற கால தாமதம் செய்து வருகிறார். 

 

நீட் தேர்வில் இருந்து, தமிழ்நாட்டிற்கு  விலக்குக் கோரும் மசோதாவை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இதன் விளைவாக வளரும் இளைய தலைமுறையினர் தற்கொலை சாவுக்கு நெட்டித் தள்ளப்படுகிறார்கள். இதே போல் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்கும் சட்டம் நிறைவேற்ற மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்க மறுத்து வருவதால், சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் உட்பட பல குடும்பங்கள் திவாலாகி, உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்ற துயரத்தை கண்டு கொள்ளாத ‘இதயமும் இரக்கமும்’ இல்லாதவராக ஆளுநர் அமைந்திருப்பது வரலாற்று அவலமாகும். 

 

பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் மூலம் தமிழ்நாடு மக்கள் ஏற்க மறுத்து, எதிர்த்து போராடி வரும் தேசிய கல்விக் கொள்கையை பகுதி, பகுதியாக திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நூற்றாண்டு கண்டு வாழ்ந்து வரும் தியாக சீலர், தகைசால் தமிழர் என் சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் அரசின் முடிவை ஏற்க மறுத்து வருகிறார்.

 

அறிவுத்துறை உலகம் ஆயிரம் ஆண்டுகளில் தலைசிறந்த பேரறிவாளர் என்று அறிவித்த காரல் மார்க்ஸ் சிந்தனைகளை இழிவுபடுத்தி பேசி வருகிறார். நாட்டின் விடுதலைக்கு போராடிய வீரர்களையும், தியாகிகளையும் தேடி, தேடி பெருமைப்படுத்தும் தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு எதிராக பகைமையும், வெறுப்பும் பரப்பும் தரம் தாழ்ந்த பிரச்சாரகராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டாட்சி கோட்பாட்டினை தகர்த்து வருகிறார். மதவெறி, சாதிய ஆதிக்க உணர்வோடு செயல்படும் அமைப்புகளின் எதிர்மறை விளைவுகள் குறித்து வாய் திறக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, அமைதி நிலையை பாதுகாத்து வரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை விமர்சித்து அடிப்படையற்ற அவதூறுகள் பரப்பி  வருகிறார். மலிவான அரசியலில் ஈடுபட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் சட்டவிரோத, அநாகரிக செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்