ministers prress meet

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை அண்மையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, மாஃபா பாண்டியராஜன், ஆர்.காமராஜ், மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Advertisment

இதன் பின் அமைச்சர் ஜெயகுமார் அங்கேயே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் “கரோனா இங்கே சமூகப் பரவலாக மாறிவிடக்கூடாது என்று கவனமாக அரசு செயல்படுகிறது. அதனால் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளது. மேலும் நாம் கரோனாவின் சங்கிலித் தொடரைத் துண்டிக்க, அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியையும் கவனமாகப் பின்பற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Advertisment

அமைச்சர் வேலுமணியோ “19ஆம் தேதி தொடங்கும் 12 நாள் பொது ஊரடங்கிற்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டப் பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பு தரவேண்டும். முக்ககவசத்தையும் சமூக விலகலையும் மறக்காதீர்கள்” என்றார் அழுத்தமாய்.

இப்படி மாறி மாறி சமூக விலகலை வலியுறுத்திய அமைச்சர்கள், அந்த பிரஸ் மீட்டில் சமூகவிலகலைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. எல்லோரும் நெருக்கியடித்து நின்று, பீதியையே ஏற்படுத்தினார்கள்.

Advertisment