Skip to main content

40,000 பேரை எவ்வித மருந்து மாத்திரை ஊசி இல்லாமலேயே குணப்படுத்தி உள்ளோம்: விஜயபாஸ்கர் 

Published on 27/06/2020 | Edited on 27/06/2020
corona virus issue - villupuram - Mundiyampakkam - C. Vijayabaskar -

 

கரோனா நோய்த்தடுப்பு பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மருத்துவக் கல்லூரி டீன் குந்தவி தேவி ஆகியோர் கலந்து கொண்ட நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. 

அப்போது அமைச்சர் கூறும்போது, “விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் நோய் தடுப்பு பணியில் 24 மணி நேரமும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மாவட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 697 பேர். இதில் 430 குணமடைந்துள்ளனர். 265 பேர் சிகிச்சையில் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் அதிக அளவில் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோயிலிருந்து தமிழகத்தில் மட்டும் இதுவரை 40,000 பேர் எவ்வித மருந்து மாத்திரை ஊசி இல்லாமலேயே குணப்படுத்தி உள்ளோம். தமிழகத்தில்தான் குறைந்த இறப்பு விகிதத்தை பராமரித்து வருகிறோம். விலை உயர்ந்த வீரியமிக்க மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ கார்ப்பரேஷன் மூலம் வரவழைத்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதிய அளவிற்கு மருந்துகள் கையிருப்பில் உள்ளது. அதேபோன்று மருத்துவர்கள் பயன்படுத்தும் கையுறை மாஸ்க் கிருமிநாசினிகள் தொடர்ந்து தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக டாக்டர்கள், பணியாளர்கள் நியமிக்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே கரோனாவிலிருந்து மக்களை பாதுகாத்து ஒற்றுமையுடன் நோயிலிருந்து வெளியே வருவோம்” என்று கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

அதிக வாக்கு வாங்கிக் கொடுத்தால் ஆடி கார் பரிசு! மாஜி மந்திரிக்கு அதிமுக வழக்கறிஞர் அறிவிப்பு

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
audi car  prize for ex-minister if he gets more votes for AIADMK

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளரும், மாநில அமைப்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் 50 ஆவது பிறந்த நாளில் அதிரடி பரிசாக அவர் பொறுப்பில் உள்ள 4 நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுக் கொடுத்தால் அவருக்கு ஆடி கார் பரிசளிப்பதாக அதிமுக வழக்கறிஞர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்மன்றத் தொகுதிகளும் திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் பிரிந்து கிடக்கிறது. இந்த நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவைவிட அதிக வாக்குகள் வாங்கிக் கொடுத்தால், அவருக்கு வேட்பாளர் சார்பில் இன்னோவா கார், புதுக்கோட்டை நகரத்தில் அதிக வாக்கு வாங்கித் தரும் வட்டச் செயலாளர்களுக்கு தலா 5 பவுன் தங்கச்சங்கிலி பரிசளிப்பதாக அறிவித்தார். இந்த நிலையில், இன்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.

இதே போல தடாகத்தில் 81 அடி உயரத்தில்  பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் சிவன் சிலை கொண்ட கீரமங்கலம் மெய்நின்றநாதர் ஆலயத்தில் அதிமுக வழக்கறிஞர் நெய்வத்தளி நெவளிநாதன் சிறப்பு வழிபாடு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போது, இன்று அதிமுக அமைப்புச் செயலாளர், வடக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பிறந்த நாள். அவரது பிறந்த நாளில் மெய்நின்றநாதர் ஆலயத்தில் இருந்து அவருக்கு ஒரு பரிசு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிக்கும் பொறுப்பில் உள்ளார். அதாவது 4 நாடாளுமன்றத் தொகுதியிலும் உள்ள 6 சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் திமுக கூட்டணி வேட்பாளர்களைவிட அதிக வாக்குகள் பெற வைத்தால் "ஆடி" கார் பரிசாக வழங்குகிறேன் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தொகுதியில் அதிக ஓட்டு வாங்கினால் இன்னோவா கார், தங்கச்சங்கிலி பரிசு பரிசு அறிவித்தார் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர். அதே அதிமுகவில் 6 தொகுதியில் அதிக வாக்கு வாங்கிக் கொடுத்தால் மாஜிக்கு ஆடி கார் என்ற அதிமுக வழக்கறிஞரின் அறிவிப்பு. சபாஸ் சரியான போட்டி என்கிறார்கள் ர.ர க்களே!