Skip to main content

"அரக்க குணம் கொண்டவர்கள்" ; பா.ஜ.க.வை டென்ஷனாக்கிய காங்கிரஸ் எம்.பி

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

Congress Mp who made BJP Tense

 

ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று (13-08-23) கைதாலில் எனும் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ‘ஜன் ஆக்ரோஷ் பேரணியில்” கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரந்தீப் சுர்ஜேவாலா ஹரியானா பா.ஜ.க அரசை கடுமையாகத் தாக்கிப் பேசினார். 

 

அதில் அவர், “பா.ஜ.க. மற்றும் ஜே.ஜே.பி கட்சியில் இருப்பவர்கள் அரக்க குணம் கொண்டவர்கள். பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பவர்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் அரக்க குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களை நான் மகாபாரத பூமியில் இருந்து கொண்டு சபிக்கிறேன்.” என்று பேசினார். அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், இதை பா.ஜ.க தரப்பினர் பகிர்ந்து தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

 

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ரந்தீப் சுர்ஜேவாலா இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்களிப்பைக் கொண்ட கட்சியைச் சேர்ந்தவர். ஆனால், அவர் அப்படி பேசி இருப்பது அவர்கள் தோற்று போவதற்கான வெளிப்பாடு. அவர்கள் தொடர்ந்து எதிர்க்கட்சியில் மட்டும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருப்பதை அவருடைய கருத்துகள் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது” என்று கூறினார்.

 

அதே போல், பா.ஜ.க.கட்சியின் செய்தி தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், அவர்களுடைய தலைவரை தேர்ந்தெடுக்க மீண்டும் மீண்டும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இப்போது பொதுமக்களையும், ஜனார்தனத்தையும் தொடர்ந்து அவமரியாதை செய்து வருகின்றனர். பா.ஜ.க.வையும் மோடியையும் கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்கள் காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா சொல்வதை கேளுங்கள். ஒரு புறம் 140 கோடி மக்களின் ஜனாதர்தனத்தின் வடிவமாக மோடி இருக்கிறார். மறுபுறம் மக்களின் அரக்கர்களாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. இந்த வேறுபாட்டை  நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.

 

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆம் ஆத்மி கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், “ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதை நான் கேட்கவில்லை. ஆனால், நிச்சயமாக கடந்த ஒன்பது ஆண்டுகளில் பா.ஜ.க அரசு நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தை மட்டும் தான் அளித்துள்ளது” என்று கூறினார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சில கெட்ட சக்திகள் வெளியேறியுள்ளது'-ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
nn

காங்கிரஸில் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி அண்மையில் பாஜகவில் சேர்ந்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. அதேநேரம் தமிழ்நாடு காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ''மீண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட இருக்கிறார். யார் கண்டிப்பாக தோற்பார்கள் என்ற பட்டியலை இன்றைக்கு அறிவித்திருக்கிறார்கள். நம்முடைய ஊரின் சாம்பார் பிடித்திருக்கிறது போல அதனால் தான் மோடி அடிக்கடி தமிழகம் வந்து கொண்டிருக்கிறார்.

திமுக கூட்டணியில் சுமூகமாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்து வெளியிடப்படும். இழுபறி எல்லாம் இல்லை. கண்டிப்பாக இந்த தேர்தலோடு காணாமல் போகப் போகிறவர் யார் என்றால் மோடி தான். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மோடி எங்கு தேடினாலும் இருக்க மாட்டார். தமிழகமே அவர்களுடைய சொந்த பூமி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து வருகின்ற பணத்தையோ, நிதியையோ, வரியையோ மீண்டும் தமிழக வளர்ச்சிக்கு கொடுக்கலாமென்று இல்லாமல் அவர்கள் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏழரை லட்சம் கோடி ரூபாயை மோடி சுருட்டி இருக்கிறார். உலக வரலாற்றில் இவ்வளவு பெரிய அயோக்கியத்தனம், லஞ்சம் ஊழல் எங்கேயும் நடந்தது இல்லை'' என்றார்.

விஜயதரணி பாஜகவிற்கு சென்றது குறித்து கேள்விக்கு, ''சில கெட்ட சக்திகள், மோசமான சக்திகள் காங்கிரசை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக வெளியேறி இருக்கிறது. அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்''எ ன்றார்.

'தமிழகத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன' என்ற கேள்விக்கு, ''தமிழகத்தில் கஞ்சா குடிக்கும் பழக்கம் என்பது நூற்றுக்கணக்கான வருடங்களாக இருக்கிறது. இப்போது அதை கட்டுப்படுத்துவதற்காக முயற்சிகள் எடுக்கும் பொழுது பல இடங்களில் தப்புத் தண்டாவில் ஈடுபடுகிறவர்கள் பிடிக்கப்படுகிறார்கள். அதிமுகவில் எத்தனை சமூகவிரோதிகள் இருக்கிறார்கள் என பட்டியல் எடுத்தால் தமிழகத்தில் பாஜகவிற்கு அடுத்து அதிகமாக குற்றவாளிகள் இருப்பது எடப்பாடியோடு தான் என்பது தெரிய வரும்'' என்றார்.

Next Story

''கூட்டணிக்கு எந்த நேரத்திலும் யார் வேண்டுமானால் வரலாம்''-நயினார் நாகேந்திரன் பேட்டி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
 "Anyone can come to the alliance at any time" - Nayanar Nagendran interviewed

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

பாஜக கூட்டணியில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஈரோடு அல்லது திருப்பூர், நாமக்கல், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய நான்கு தொகுதிகளை தமாகா கேட்டுள்ளது. மூன்று தொகுதிகளை  கொடுக்க பாஜக முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கூட்டணியில் உள்ள தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு இடத்தை பாஜக ஒதுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் அணியும், டிடிவி தினகரனின் அமமுகவும் பாஜகவுடன் கூட்டணி வைக்குமா என்ற கேள்விகள் இருந்தது. இந்நிலையில் சென்னையில்  பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,''எங்கள் தலைமையின் உத்தரவின் பேரில் ஜான்பாண்டியனிடம் நானும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும், அகில இந்திய மகளிரணி தலைவி வானதி சீனிவாசனும் நேற்றிலிருந்து கூட்டணி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

காலைஜி.கே.வாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம்.அவருடைய விருப்பத்தை எங்களிடம் சொல்லி இருக்கிறார்கள். ஜான் பாண்டியனும் அவருடைய விருப்பத்தை எங்களிடம் சொல்லி இருக்கிறார். இந்த விருப்பத்தை நாங்கள் கலந்து ஆலோசித்து எங்களுடைய தலைமைக்கு அறிவித்த பிறகு தலைமை முடிவு எடுக்கும். தேர்தல் கூட்டணி என்கின்றபோது கொள்கை அடிப்படையிலான கூட்டணி எதுவுமே கிடையாது. தேர்தலுக்கான கூட்டணி தான். தேர்தல் நேரத்திற்கான கூட்டணி என்பதால் எந்த நேரத்திலும் யார் வேணாலும் கூட்டணியில் இணைந்து கொள்ளலாம்''என்றார்.