
பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஊழலில் ஈடுபட்டவர்கள் ஒன்றிணைந்து இருப்பதாக பேசி இருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் இது குறித்துப் பேசுகையில், "வங்கி பணத்துடன் இந்தியாவை விட்டு தப்பி ஓடியவர்கள் மீது மோடி எவ்வித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. மேலும் மோடி ஊழல்வாதிகளை ஆதரிக்கிறார். அவர் ஊழல்வாதியா அல்லது நாங்களா” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "அதானியை பற்றி ஏன் பேசவில்லை என்று நாங்கள் கேட்டால் எங்களை ஊழல்வாதி என்கிறார். பெரிய திருட்டுகளில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்கும் மோடி மற்றவர்களை திருடர்கள் என்று கூறுகிறார். அவர் உண்மையை பேச வேண்டும். ஆனால் மற்றவர்களை இழிவுபடுத்துவதில் தான் ஆர்வமாக உள்ளார்" என்றார்.