Skip to main content

முதல்வர் வேட்பாளரை அறிவித்தால்தான்... -தனியரசு

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

U.Thaniyarasu

 

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட குழுக் கூட்டம் 18.09.2020 மாலை நடைபெற்றது. இதில் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தியதாகவும், அதனை இப்போது அறிவிக்க வேண்டாம் என்று சிலர் பேசியதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் 2021 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும், காங்கேயம் எம்.எல்.ஏ.வுமான தனியரசு நம்மிடம் பேசும்போது, 

 

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க அதனை அறிவிக்கும் என்று நம்புகிறேன். கூட்டணிக்கு தலைமையேற்கிற அ.தி.மு.க., ஒரு தலைமையின் கீழ் இயங்கி முதல்வர் வேட்பாளரை அறிவித்தால்தான், அந்த அணிக்கு வெற்றி சாத்தியமாகும். கூட்டணிக் கட்சிகளும் தைரியமாகக் களத்தைச் சந்திக்கும். அ.தி.மு.க என்று இல்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும் அப்படித்தான்.

 

Ad

 

என்னைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. டிசம்பர், ஜனவரி காலக்கட்டத்தில்தான் முதல்வர் வேட்பாளர் பற்றிய முடிவுக்கு வரும். முன்கூட்டியே இதுபோன்ற முடிவுகளை அ.தி.மு.க.வில் எதிர்பார்க்க முடியாது. அதுவரை கட்சியைக் கட்டுக்குள் வைப்பது, கட்சியைப் பலப்படுத்தும் பணிகளில் அ.தி.மு.க ஈடுபடும் என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அவர்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது - ஈரோட்டில் தனியரசு பேச்சு...

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

"இந்த சட்டசபை காலம் முடிகிற வரைக்கும் உள்ளாட்சி தேர்தல் வேண்டாமுங்க" என ஈரோட்டில் கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் தலைவரான உ. தனியரசு எம்.எல்.ஏ.கூறினார்.  

 

thaniarasu pressmeet at erode

 

 

இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும்.கூறியதாவது:-

"தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் பலமுறை நடத்த அரசு ஏற்பாடு செய்தும் நடைபெறவில்லை. இப்போதும் கூட இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகமாகத் தான் உள்ளது அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து  கலந்தாலோசித்து இந்த  உள்ளாட்சித் தேர்தலை வருகிற 2021ஆம் ஆண்டு வரை ஒத்தி வைப்பது தான் நல்லது. இது எனது கருத்து . நடிகர்கள் ரஜினிகாந்த்,  கமல்ஹாசன் இருவருமே தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இருவரும் இத்தனை ஆண்டுகளாக  எந்த ஒரு கட்சியிலும் அடிப்படை உறுப்பினராக கூட சேராமல், மக்களுக்காக எந்த ஒரு போராட்டத்திலும் பங்கேற்காமல், திடீரென அரசியலில் நுழைந்து அரியணையில் ஏற நினைப்பது மிகப் பெரிய தவறு. அவர்கள் மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம் தமிழக மக்கள் இனி எந்தவொரு  நடிகர், நடிகைகளையும் அரசியல் தலைவர்களாக  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நடிகர்களான அவர்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது." என கூறினார்.

 

 

Next Story

காஷ்மீரிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்! உ.தனியரசு

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

 

காஷ்மீரிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவரான உ.தனியரசு எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

 

u thaniyarasu


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

மத்திய பாஜக அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து 370 மற்றும் 35A சட்டங்களை ரத்து செய்திருப்பது - இந்தியாவுடன் காஷ்மீர் இணையும் போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். 
 

மத்திய அரசு ரத்து செய்த பழைய சிறப்பு சட்டங்களையே அங்கு மீண்டும் அமல்படுத்தி, அம்மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்.


காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. அதற்கு மத்திய அரசின் புதிய நடவடிக்கைகள் ஊறு விளைவிக்கும் என்பதை சுட்டிக் காட்டுகிறோம். 
 

மத்திய அரசு காஷ்மீர் ஒப்பத்தத்தை மீறி 370 மற்றும் -35 A வை ரத்து செய்திருப்பது நேர்மையற்ற செய்லாகவும் - மேலாதிக்க போக்காகவும் உள்ளது. 


 

காஷ்மீர் மக்களின் உணவுர்களுக்கு மதிப்பளிக்காமல், அவர்களின் கருத்துகளை அறியாமல் எடுத்த இம்முடிவை தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கண்டிக்கிறது.
 

காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது. மீண்டும் ஜம்மு காஷ்மீர் - லடாக் பகுதிகளை உள்ளடக்கிய தனி அதிகாரமிக்க முழு மாநில அந்தஸ்த்தை வழங்கிட  வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
 

ஜம்மு காஷ்மீரில் நிலவும்  தற்போதைய  நிலைய அறிந்து கொள்ள, அனைத்து கட்சி தலைவர்கள் குழு அங்கு சென்று பார்வையிடவும் உண்மை நிலையறியவும் மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.