Skip to main content

"தொண்டனாக இருந்து பெரிய பதவியை அடைந்துள்ளேன்"- துரைமுருகன் பேட்டி!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

chennai anna arivalayam duraimurugan press meet

 

தி.மு.க.பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் அண்ணா அறிவாலயத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும், தி.மு.க. அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ்.பாரதியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

 

chennai anna arivalayam duraimurugan press meet

 

வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், "தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக இருந்து பொதுச்செயலாளர் என்ற பெரிய பதவியை அடைந்துள்ளேன். அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், க.அன்பழகன் இருந்த பதவியில் நானும் போட்டியிடுகிறேன் என்பதே சிறப்புமிக்கது. பொதுச்செயலாளர் பதவிக்கு உண்டான அதிகாரங்கள் எதுவும் மாறவில்லை" என்றார்.

 

தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.

Next Story

திமுக கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி-ஐந்து ஒன்றியமாக பிரிக்கப்பட்ட தொகுதி

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
End of DMK party tussle- Constituency divided into five unions

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை எதிர்க்கட்சியான அதிமுக கைப்பற்றியதில் மூன்றாவது முறையாக தேன்மொழி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அப்படி இருந்தும் கூட ஆளுங்கட்சியான அந்தப்பகுதி திமுகவினர் இத்தொகுதியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்வம் கட்டாமல் தங்களுக்குள் கோஷ்டி பூசலை உருவாக்கிக் கொண்டு கட்சியை வளர்க்கவும் சரிவர ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே அறிவாலயம் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இந்த நிலக்கோட்டை தொகுதியில் வத்தலகுண்டு மற்றும் நிலக்கோட்டை என இரண்டு யூனியன்கள் உள்ள. இந்த யூனியன்களுக்குட்பட்ட பகுதிகளை 5 ஒன்றியங்களாக பிரித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வத்தலக்குண்டு ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டு வத்தலக்குண்டு வடக்கு, வத்தலக்குண்டு தெற்கு என புதிய ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 3 பேரூராட்சிகள், 8 ஊராட்சிகள் அடங்கிய வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக கே.பி. முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் 9 ஊராட்சிகள் அடங்கிய புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெற்கு ஒன்றியத்திற்கு கனிக்குமார் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

End of DMK party tussle- Constituency divided into five unions

இதேபோல் நிலக்கோட்டை யூனியனை மூன்று ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நிலக்கோட்டை தெற்கு ஒன்றியத்தில் நிலக்கோட்டை பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகளை அடங்கிய பகுதிக்கு மணிகண்டன் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிலக்கோட்டை வடக்கு ஒன்றியம் 7 ஊராட்சி ஒன்றியங்களாக சுருக்கப்பட்டு ஒன்றிய பொறுப்பாளராக சௌந்தரபாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய செயலாளர் பதவி கேட்டு நீண்ட நாள் போராடி வந்த கரிகால பாண்டியனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கு ஒன்றியம் என ஒரு கட்டமைப்பு பிரிக்கப்பட்டுள்ளது.

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மற்றும் 7 ஊராட்சிகள் உள்ளடக்கிய பகுதிகளுக்கு கரிகால பாண்டியன் ஒன்றிய பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிலக்கோட்டை தொகுதியில் திமுக அதிக அளவில் வாக்குகளை பெற்றுத் தர வேண்டும். பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் திமுக கொடி பறக்க வேண்டும் என்பது கட்சித் தலைமையின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்காகவே கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக ஒன்றியங்களை பிரித்து புது வியூகத்தை உருவாக்கி தேர்தல் களத்தை சந்திக்க ஆளும் கட்சியான திமுக தயாராகி வருகிறது.