Skip to main content

''அமைச்சரவையே ஈரோட்டில்தான் இருக்கிறது; ஒரு இடத்தில் கூட காங்கிரஸ்காரர்களை காணவில்லை'' - செல்லூர் ராஜு பேட்டி

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

nn

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

 

இந்நிலையில், பிரச்சாரத்திற்கு இடையே செய்தியாளர்களைச்  சந்தித்துப் பேசிய முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ''வாக்காளர்கள் சுபிட்சமாக; சுயேட்சையாக வாக்களிக்க வேண்டும். நீங்களும் வாக்கு கேளுங்கள். உங்கள் தலைவர் வரப்போகிறார், முதலமைச்சர் வருகிறார், அடுத்த வாரிசு உதயநிதி வருகிறார், நேற்று கனிமொழி வந்தார். இப்படி வரிசையாக வந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா அமைச்சர்களும் இங்கே தான் இருக்கிறார்கள். தமிழ்நாடு அமைச்சரவையே ஈரோடு கிழக்கு தொகுதியில் தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் திமுக கொடிதான் இருக்கிறது. பேருக்கு காங்கிரஸ் கொடியைத் தூக்குகிறார்கள். அதுவும் அவர்களுக்குள் போட்டி. நாங்கெல்லாம் காங்கிரஸ் கொடியைத் தூக்கமாட்டோம். நாங்கள் காலங்காலமாக திமுககாரர்கள். நாங்கள் ஏன் காங்கிரஸ் கொடியைத் தூக்குவோம் என்று சண்டை போட்டுக்கொள்கிறார்கள். ஒரு காங்கிரஸ்காரர்களைக் கூட பார்க்க முடியவில்லை.

 

நான் இரண்டு பூத்திலும் பார்க்கிறேன். ஒரு இடத்தில் கூட காங்கிரஸ்காரர்களே இல்லை. எங்கு பார்த்தாலும் திமுக அமைச்சர்கள், திமுககாரர்கள்தான் இருக்கிறார்கள். உலகத்திலேயே இதுவரை நடக்காத எது மாதிரியான புது மாதிரியாக இருக்கிறது. இப்படி எந்த தேர்தலையும் நான் பார்த்ததே இல்லை. எத்தனையோ இடைத்தேர்தலை பார்த்திருக்கிறோம். ஆளுங்கட்சிக்காரர்கள் கொஞ்சம் ஆட்கள் இருப்பார்கள். கொஞ்சம் வேலை பார்ப்பார்கள். அவர்களுடைய ஆர்வத்தை காண்பிப்பார்கள். ஆனால், இப்படி கூட்டிட்டு போய் ஆடு, மாட அடைக்கிற மாதிரி அடைக்கிறது, சினிமா போடுவது, பிரியாணி கொடுப்பது, பிஸ்கட் கொடுப்பது, பிஸ்லெரி பாட்டில் கொடுப்பது என ரொம்ப ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது ஈரோடு இடைத்தேர்தல்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்