Skip to main content

பாஜக பொதுச் செயலாளராக பி.எல்.சந்தோஷ் நியமனம்

B.L. Santosh



பாஜக தேசிய அமைப்பு பிரிவு பொதுச்செயலாளராக பி.எல்.சந்தோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்த ராம்லால் ஆர்.எஸ்.எஸ். பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த இடத்திற்கு பி.எல்.சந்தோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். 
 

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பி.எல்.சந்தோஷ், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினர் ஆவார். தேர்தல் வியூகங்களை வகுப்பதில் நிபுணத்துவம் மிக்கவரான இவர், கர்நாடகாவில் எட்டு ஆண்டுகளாக பாஜக பொதுச்செயலாளராக இருந்தவர். 2014ஆம் ஆண்டு தென்மாநிலங்களுக்கான கட்சி பொறுப்பாளராக செயல்பட்டார்.