Skip to main content

''உங்களுடைய பர்சனல் ஈகோவிற்காக மாநிலத்தின்  நலன்களை பலியிட வேண்டாம்''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி 

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

bjp Vanathi Srinivasan Interview

 

பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவிருக்கும் நிலையில் பாஜக கட்சியின் எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''இப்போது பெட்ரோல், டீசல் வரியை தமிழக அரசு குறைக்காவிட்டால் கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என  அண்ணாமலை அறிவித்திருக்கிறார். நாளை நாட்டினுடைய பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். அடிப்படை கட்டமைப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகவும், நிறைவுற்ற திட்டங்களையும் அதே நேரத்தில் துவக்கி வைப்பதற்காகவும் நாளை வருகிறார். நாளைக்கு அவர் வரக்கூடிய காரணம் என்பது முழுக்க முழுக்க தமிழக நலன் சார்ந்தது. மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் இணைந்து அவரவருடைய துறைகளில் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பது தான் மக்களுடைய விருப்பமாக இருக்க முடியும்.

 

தங்களுக்கு அரசியல் வாழ்க்கை வேண்டுமென்றால் மோடி அவர்களை எதிர்ப்பது, பிஜேபியை எதிர்ப்பது என்ற உங்கள் அரசியல் அஜெண்டாவை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் மாநிலத்தின் நலன் என்பது முக்கியம். உங்களுடைய பர்சனல் ஈகோவிற்காக மாநிலத்தின் நலன்களை பலியிட வேண்டாம். இப்பொழுதும் எங்களுடைய கோரிக்கை  ஏழை எளிய மக்களுக்கு, சாமானிய மக்களுக்கு பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறோம். தமிழக அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். எந்த ஏழை மக்களுக்காக பேசுங்கள் என பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களைப் பார்த்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினாரோ அதே சாதாரண மக்களுக்காகதான் இப்போது இதைக் கேட்கிறோம். மத்திய அரசு வரியை குறைத்துள்ளது. மாநில அரசு நீங்களும் உங்கள் பங்கிற்கு குறைத்துக் கொள்ளுங்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.