Skip to main content

“இதை ஆளுநரைப் பார்த்து பாஜக கேட்க வேண்டும்” - அமைச்சர் ட்விஸ்ட் 

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

"BJP should ask the governor about this," - Minister Twist

 

ஊட்டியில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர், “நமது மாநிலத்தில், தொழில் முதலீட்டாளர்களை மேலும் மேலும் கவரக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். நாம் கேட்பதாலோ அல்லது அவர்களுடன் சென்று பேசுவதாலோ முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள்.” என்று முதல்வரை நேரடியாகவே விமர்சனம் செய்திருக்கிறார்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “துணை வேந்தர் மாநாட்டை ஆளுநர் அரசியலுக்காக பயன்படுத்தியுள்ளார். சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் ஆளுநர் கூறியதற்கு மாறாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளதால், அதிலிருந்து கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தோடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஆளுநர் ஆர்.என். ரவி தன்னை முழு அரசியல்வாதியாக மாற்றிக் கொண்டுள்ளார். உதகையில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் தனது அரசியலுக்காக பயன்படுத்தியுள்ளார்.

 

கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதை பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநர் ரவி மறைத்துவிட்டு பேசியுள்ளார். ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள கல்வி நிறுவனங்களின் தர வரிசையில், தேசிய அளவில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதை தெரிந்தும் தெரியாதது போல் பேசுகிறார். அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கோடு உண்மைக்கு மாறான செய்திகளைப் பேசி வருகிறார் ஆளுநர். அப்படி பேசும் கருத்துக்கு கண்டனம் வலுக்கும்போது அடுத்த கருத்தை கூறுகிறார். அரசியல் செய்ய வேண்டும் என ஆளுநர் எண்ணினால் அதற்கு அவர் ஆளுநர் மாளிகையைப் பயன்படுத்த வேண்டாம்.

 

வெளிநாட்டு பயணங்களை தமிழக முதலமைச்சர் மட்டுமா மேற்கொண்டுள்ளார். இன்றைய மத்திய அரசின் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்தார். பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து அங்கிருக்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்துள்ளார். எனவே பாஜக தான் கவர்னரை நோக்கி இதற்கெதிராக கேள்விகளை கேட்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள்' - துரைமுருகன் பேட்டி

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
 'If you give, who will not want' - Durai Murugan talk

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு காரில் அமர்ந்தபடி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள்  கேள்விளை வைத்தனர். அப்போது, 'துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட  இருப்பதாகவும், அந்த வாய்ப்பு உங்களுக்கு கொடுக்கப்பட இருப்பதாகவும் கட்சிக்காரர்கள் எல்லாம் நினைக்கிறார்கள். உங்களுக்கு அந்த எதிர்பார்ப்பு இருக்கிறதா?' என்ற கேள்விக்கு, கையெடுத்துக் கும்பிட்ட படி பதிலளித்த அவர், ''கொடுத்தா யாருதான் வேண்டாம் என்று சொல்வார்கள். இது எல்லோரும் சேர்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு. தமிழகத்தில் நடப்பது கூட்டு மந்திரிசபை. எனவே தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்'' என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 'தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா அரசு அணை கட்டும் விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.அதிமுகவுக்குள் நடப்பது தான் நாடகம்' என்றார்.

Next Story

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
Admitted to Senthil Balaji Hospital

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.

இந்த வழக்கு தொடர்பான பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம் செந்தில் பாலாஜி தரப்பு முதன்மை நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என நீதிமன்றங்களில் பலமுறை ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்து ஜாமீன் பெற முயன்று வருகிறது.

இந்நிலையில் நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட ஆரம்ப காலத்திலேயே இதயக் கோளாறு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.