இன்று காலையில் தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைசந்தித்ததமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி,தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில்பாஜகவின் தலைமையில்தான் கூட்டணி அமையும்.மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும். அதேபோல் தமிழகத்தில் அதிமுக-திமுக இடையே போட்டிதான் இதுவரை நிலவி வந்தது, இனிமேல் பாஜக-திமுக போட்டியாக இருக்கும் எனவும் கூறினார்.
ஒருபுறம் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கருத்துஓடிக்கொண்டிருக்கும் நிலையில்,தற்போது வி.பி துரைசாமி இந்த தகவலைசெய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.