
மோடி எங்கே என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேடுவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "கல்யாண வீடுகளில் நாம் உறவினர்களை தேடுவது போல அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எங்கே மோடி எங்கே மோடி என்று பிரதமர் மோடியை தேடுகிறார்" என தெரிவித்துள்ளார்.