fff

சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக மாநிலம் பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா.

Advertisment

இந்தச் சிறையில், சிலர் சமீப காலமாகக் கைதிகளுக்கு மறைமுகமாக உதவி செய்வதாகவும், செல்ஃபோன் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மைக்கு சிலர் புகார் அளித்துள்ளனர்.

Advertisment

இந்தப் புகாரையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார், மத்திய மந்திரி. இந்த உத்தரவின் பேரில் போலீஸ் உயரதிகாரிகள் பரப்பன அக்ரஹார சிறையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். திடீரென நடந்த இந்தச் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.