
புதுச்சேரி பாஜக பிரமுகர் வெடி குண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநில பாஜக பிரமுகர் செந்தில்குமார். இவர் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொலை செய்துள்ளனர். வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் தனது வீட்டிற்கு அருகே பேக்கரியில் நின்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் செந்தில்குமார் மீது வெடிகுண்டுகளை வீசியும் கத்தியால் குத்தியும் படுகொலை செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் என கூறப்படுகிறது. செந்தில்குமாரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை வில்லியனூர் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.