
ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் நடவடிக்கைகளை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய தடைக்கு எதிராக தமிழக அரசு சரியாக வாதிடவில்லை என ஆறுமுகசாமி சமீபத்தில் பரபரப்பான கடிதம் ஒன்றை தமிழக அரசுக்கு எழுதினார்.
ஆறுமுகசாமி கமிஷனில் அரசு வழக்கறிஞர்களாக வேலை செய்தவர்கள் யாருக்கும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. ஆறுமுகசாமி கமிஷன் தொடர்பான வழக்கு, விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் வரவிருக்கிறது. அதில் கமிஷனுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை நீங்கிவிடும் என ஆறுமுகசாமி எதிர்பார்க்கிறார். அதனால், விரைவாக ஜெ.வின் மரணம் குறித்த கமிசன் முடிவுகளை டைப் செய்ய ஆரம்பித்துள்ளார்.
அதில் ஜெ.வின் உடலில், ’பொட்டாசியம்’ என்கிற தனிமம் அதிகமாக இருந்தது. அதுதான், அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்தது என கமிசனில் ஜவருல்லா கான் என்கிற வழக்கறிஞர் வைத்த வாதம் கமிஷனின் முடிவாக மாறுகிறது. ஜெ.வின் உடலில் ’பொட்டாசியம்’ எப்படி அதிகமானது என்கிற முக்கியமான கேள்வியை ஆறுமுகசாமி முன்வைக்கிறார். இது தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் கமிசனுக்கு நெருக்கமான வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)