Skip to main content

அமித் ஷா விசிட் கேன்ஸலா..? அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி..?

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

Amit Shah cancels visit? ADMK BJP Alliance ..?


தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன. மேலும் ம.நீ.ம. கட்சித் தலைவர் கமலும் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இன்னும் கூட்டணிகள் குறித்தும் தொகுதிகள் குறித்தும் உறுதியாகாத நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கி நடத்திவருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி தமிழகம் வந்து தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

 

மேலும் கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவிலும் பங்கேற்றார். இதில் பா.ஜ.க.வுடனான அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என்று முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரும் அமித்ஷா முன்னிலையில் கூட்டாக அறிவித்தனர். ஆனால், அதனைத் தொடர்ந்து பேசிய அமித் ஷா, அதுதொடர்பாக ஏதுவும் கருத்து கூறவில்லை. அதேபோல், பா.ஜ.க. முன்னணி தலைவர்கள், முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்க மறுத்து வருகிறார்கள்.

 

வரும் 14ம் தேதி ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அமித்ஷா தமிழகம் வர இருப்பதாகவும் அவர் ரஜினியைச் சந்தித்துப் பேச வாய்ப்பு இருப்பதாகவும், கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

 

இந்நிலையில், தமிழகத்திற்கு வரவிருந்த பா.ஜ.க.வின் முக்கிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தனது விசிட்டை கேன்ஸல் செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

‘துக்ளக்’ பத்திரிகையின் ஆண்டுவிழாவில் பங்கேற்க வரவிருந்த அமித் ஷா, இந்த விசிட்டின்போது எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கூட்டணி குறித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால், திடீரென தனது விசிட்டை கேன்ஸல் செய்தது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி விவகாரத்தில் மோதல் என்கிற விமர்சனத்தை அதிகப்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.