Skip to main content

அமைதிப்படை அமாவாசை... சீமான் பேச்சு... 

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 
 

அப்போது அவர், இந்த துரோகிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று டிடிவி தினகரன் தெரு தெருவாய் பேசி வருகிறார். இந்த துரோகிகளை உருவாக்கிவிட்டத யார்? எடப்பாடி முதல்வர் என்று சசிகலா சொன்னபோது, அண்ணன் அமைதிப்படை சத்தியராஜைப்போல மண்டியிட்டு வந்தார். மோடிக்கும் எடப்பாடிக்கும் வித்தியாசம் கிடையாது. அத்வானி மிகப்பெரிய தலைவராக இருந்தபோது, அவரை மோடி கும்பிட்ட படமெல்லாம் இருக்கிறது. பாருங்கள். இதற்கு மேல் ஒருவர் குனியமுடியாது அப்படி குனித்து கும்மிட்டுவிட்டு, பிரதமரானதும் அத்வானியை கண்டுகொள்ளாமல் போகிறார். இதுதான் அமைதிப்படை அமாவாசை.


 

seeman speech


சசிகலா உட்கார்ந்திருக்கிறார். எடப்பாடி என்று சொல்லுகிறார். அவர் எங்கே என்று எல்லோரும் தேடுகிறார்கள். அவர் மண்டியிட்டு வருகிறார். சசிகலா அம்மாவுக்கே வெட்கம் வந்து அந்த அம்மாவே சட்டென எழுந்து, பாவம் ரொம்ப பெரியவர் இப்படிக் கிடக்கிறாரே என்று அவரை எழுப்பி தட்டிக்கொடுக்கிறார்.  முதல் அமைச்சர் பதவியில் உட்கார்ந்த உடனேயே, நீயா எனக்கு சீட்டு கொடுத்தாய், நீயா எனக்கு ஓட்டு கேட்டாய், நீ என்ன செய்தாய் எனக்காக என கேட்டார் எடப்பாடி. இவர்களை ஒழிக்காமல் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது. 

 

பணக் கொழுப்பில் அள்ளி இறைத்து எப்படியாவது பதவிக்கு வந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிகப்பட்சம் ஆறு மாதம் வண்டி ஓட்ட மாட்டார்கள். இதற்கும் சேர்த்து மறுபடியும் தேர்தல் வரப்போகிறது. மேல பாஜக மீண்டும் வரவில்லை என்றால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கதைகளெல்லாம் முடிந்தது. ஓ.பி.எஸ். இப்பவே புலம்பி தீர்க்கிறார். என் மகனுக்கு மந்திரி பதவி கொடுங்க, என்னால இங்க இருக்க முடியல என புலம்புகிறார். இவ்வாறு பேசினார். 

 

 


 

சார்ந்த செய்திகள்