வரும் 27 ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படவுள்ள நிலையில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் என அனைவரும் நினைவிடம் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் நினைவிட கட்டுமானத்தின்சிறப்பம்சம் குறித்தும் கேட்டறிந்தனர். இதனையடுத்து அமைச்சர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில்மலர் தூவி மரியாதை செலுத்தினர்.