Skip to main content

''அதிமுக அயோக்கியர்களின் கூடாரமாகிவிட்டது... ஜெயலலிதா இல்லாத தைரியத்தில் ஸ்டாலின்  இப்படி பேசுகிறார்...''-டி.டி.வி.தினகரன் பேட்டி

Published on 26/06/2022 | Edited on 26/06/2022

 

TTV

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் எழுந்து, அதனைத் தொடர்ந்து பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்று முடிந்த நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ் பிளவு காரணமாக அது தொடர்பான சிக்கல்கள் தற்பொழுது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ''எம்ஜிஆர் காலத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் பொதுக்குழு எவ்வளவு சிறப்பாக, சரித்திர பெயர் வாய்ந்த பொதுக்குழுவாக இருக்கும் என தெரியும். ஆனால் அண்மையில் அதிமுகவில் நடந்தது சரித்திரத்தில் இது போன்ற ஒரு தவறான நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எந்த ஒரு அரசியல் இயக்கத்திலும் நடக்கக் கூடாத ஒரு கருப்பு நாளாக இருக்கிறது'' என்றார்.

 

அப்போது செய்தியாளர் ஒருவர் 'திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போனார்கள்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளது குறித்து  கேள்வி எழுப்ப,  '' 'கலைஞர் ஒரு தீய சக்தி' என்று சொல்லித்தான் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அந்த இயக்கத்தை வழி நடத்தினார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த தைரியத்தில் இப்படி பேசுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு இயக்கம் இருக்கின்றது என்பதை ஸ்டாலின் மறந்துவிட்டார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் இருக்கிறார்கள், எம்ஜிஆர் தொண்டர்கள் இருக்கிறார்கள். வருங்காலத்தில் ஜெயலலிதாவுடைய ஆட்சி அமைக்கப்படும். தமிழ்நாட்டில் திமுகவிற்கு சாவு மணி அடிப்போம். அதிமுக என்பது அயோக்கியர்களின் கூடாரமாக மாறிவிட்டது. வருங்காலத்தில் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம். அவர்களது கொள்கைகளை கடைபிடிப்போம். அதன் பிறகு அதிமுக கட்சியை நாங்கள் கைப்பற்றுவோம்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.