Skip to main content

அதிமுக பொதுக்குழு வழக்கு; ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

AIADMK General Committee Case; The Supreme Court rejected the plea of ​​OPS

 

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.முக. நிர்வாகி வைரமுத்து தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

 

இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. மற்றும் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவரது வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

அதில், ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்கு மட்டுமே தடை கோரி இருப்பதாகவும், தீர்மானங்களை எதிர்த்து அல்ல என்றும், எனவே மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

 

இந்த வழக்கு  21/11/2022 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பும், அவகாசம் வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பும் கோரின. 

 

இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைத்து தரப்பும் தங்கள் வாதங்களை, ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதி வழங்கி வழக்கு விசாரணையை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக நாளை நடைபெற இருந்த விசாரணை டிசம்பர் 6-இல் திட்டமிட்டபடி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் நாளை நடைபெற இருந்த விசாரணை திட்டமிட்டபடி டிசம்பர் 6-இல் நடைபெற வேண்டும் என முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை திட்டமிட்டபடி டிசம்பர் 6-இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம் எனத் தெரிவித்தனர்.

 

இந்நிலையில், டிசம்பர் 6-இல் விசாரிக்க இருக்கும் வழக்கை டிசம்பர் 13-க்கு தள்ளிவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஒரு கோரிக்கையை முன் வைத்தார். அதை நிராகரித்த உச்சநீதிமன்றம் அது தொடர்பாக உள்ள சிக்கலை டிசம்பர் 6-இல் தெரிவிக்கலாம் எனக் கூறி அதிமுக தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.