AIADMK general committee case Investigation to begin today

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisment

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்குஎதிராகசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தஓபிஎஸ்தரப்பு, பின்னர் இந்தவழக்கைகிருஷ்ணன் ராமசாமிஅமர்விலிருந்துமாற்றக்கோரி தலைமை நீதிபதியிடம் முறையிட்டது. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இது நீதித்துறையைக் களங்கப்படுத்தும் கீழ்த்தரமான செயல் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பின், நீதிபதியிடம் வருத்தம் தெரிவித்தஓபிஎஸ்தரப்பு, இந்தவழக்கைக்கிருஷ்ணன் ராமசாமி முன்பே நடத்தவிரும்புவதாகதெரிவித்தது.

Advertisment

இந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதியே முடிவு செய்யட்டும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்திருந்த நிலையில், இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிஜெயச்சந்திரன்நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை இன்று தொடங்குகிறது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.