அதிமுகவும் பாஜகவும் இரட்டைகுழல் துப்பாக்கியாக செயல்படுவது உண்மைதான் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அதிமுகவும் பாஜகவும் இரட்டைகுழல் துப்பாக்கியாக செயல்படுவது உண்மைதான். நீட் தேர்வு, காவிரி உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுக்கு அடிபணிந்து இருக்கும் அதிமுக ஆட்சி இரட்டை குழல் துப்பாக்கியாக தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே, இந்த ஆட்சியில் நடக்கும் ஊழல்கள் அனைத்திற்கும் மத்திய அரசு துணையாக இருந்து வருகிறது. தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை செய்துவிட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவை இரட்டை குழல் துப்பாக்கியாக தான் அதிமுகவும் பாஜகவும் செயல்படுகிறது என நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழில் குறிப்பட்டது உண்மை தான்.
முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன ஆனது? அதனை நிறைவேற்ற அவர்களுக்கு துப்பில்லை. பதவியை காப்பாற்றி கொள்ள பிரதமரை சந்திப்பார்களே தவிர இந்த பிரச்சனைகளுக்காக கடிதம் கூட அளிக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.