
தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வராவார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.ககட்சியின் 49ஆவது ஆண்டு விழாவையொட்டி, எம்.ஜி.ஆர் சிலைக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "அ.தி.மு.கவின் 49 -ஆவது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தவரை நிரந்தர முதல்வராக இருந்தவர். எம்.ஜி.ஆர் ஏழை எளிய மக்களுக்குப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர். வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டில் நமது எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வராக இருப்பார்.
அரசுப் பள்ளியில் படித்த மாணவர் 664 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார். புதிய பாடத்திட்டங்களில் அதிக அளவில் கேட்கப்பட்டுள்ளது. இதை நாடே வியந்து பாராட்டி வருகிறது. கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ உள் இடஒதுக்கீடு பெற்றுக்கொடுக்க நமது முதல்வர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார்.

முதல்வரால் எடுக்கப்படும் ஒவ்வொரு நடவக்கையும் மாணவர்களின் நலனில் உள்ள அக்கறையைக் காட்டுவதாக இருக்கிறது. அ.தி.மு.க அரசு மக்களுக்கான அரசு. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களைநேசிக்கிற முதல்வராக என்றும் இருப்பார்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)